Vasthu Santhi Homam

கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் விதத்திலும், வாஸ்து பகவானை பற்றியும், வாஸ்து சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள் அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனைகள், இருப்பிடங்கள், நிலங்கள், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும் என்ற வகையில் வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை, கீழ்புதுப்பேட்டை தன்வந்திரி பீடத்தில் உலகில் வேறெங்கும் இல்லாதவாறு வாஸ்து பகவானுக்கென்று ஒரு பீடம் அமைத்துள்ளார்.

இப்பீடத்தில் பிரதி செவ்வாய் கிழமை மற்றும் ஒவ்வொரு வாஸ்து நாட்களிலும், வளர்பிறை பஞ்சமி நாட்களிலும் வாஸ்து சாந்தி ஹோமமும், நிவர்த்தி பூஜையும் மற்றும் பஞ்சபூத வழிபாடும் அஷ்டதிக் பாலகர் பூஜையும் நடைபெறுகிறது. ஹோமத்தில் வைக்கப்பட்ட செங்கல், வாஸ்து யந்திரம், மச்ச யந்திரம், வாஸ்து மண் வாஸ்து தேங்காய்,வாஸ்து பொம்மை மற்றும் வாஸ்து நிவர்த்தி பொருட்களை விரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி ஆசீர்வதித்து வருகிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த பிரசாதங்களை பெற்ற எண்ணற்ற மக்கள் பயனடைந்து, மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்லி அவர்களும் தன்வந்திரி பீடத்திற்கு வருகை தந்து வாஸ்து பகவானையும், இதர பரிவார தெய்வங்களையும் தரிசித்து சுவாமிகளிடம் ஆசி பெற்று செல்கின்றனர். என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். வருகிற 04.06.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணியளவில் வாஸ்து நாளை முன்னிட்டு வாஸ்து தோஷம் நீக்கும் வாஸ்து ஹோமம் நடைபெறுகிறது. .

வாஸ்து பகவான் அமைப்பு
வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்களுடன், அஷ்டதிக் பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவ பெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கி படுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருக்காட்சி வேறெங்கும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
வாஸ்து தோஷத்தால் ஏற்படும் தொல்லைகள்Tamil version

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images