

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக அமைதி வேண்டியும் உலக நலனுக்காகவும் பெண்களின் மாங்கல்ய பலம் கூடவும், திருமணம், குழந்தை பாக்யம் வேண்டியும், தொழில் வியாபாரம் சிறக்கவும், குளந்தைகள் கல்வியில் மேன்மை அடயவும், தம்பதிகள் ஒற்றுமைக்காகவும், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரவும், மழை வேண்டியும் இயற்கை வளம் பெறவும் சகல விதமான ஜீவராசிகளின் நலனுக்காகவும் விவசாய பெருமக்களின் நலனுக்காகவும் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஆடி மாதம் 19ம் தேதி 04.08.2017 வெள்ளிக் கிழமை வரலக்ஷ்மி நோன்பு முன்னிட்டு காலை 9.00 மணிக்கு கோபூஜை கணபதி பூஜையுடன் வரம் அருளும் வர மஹாலக்ஷ்மி யாகமும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கும் நவ கன்னிகைக்கும் கூழ்வார்த்தல் விழா நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜைநோன்பு நாளாகும் முன்ஜென்ம கர்ம, பாவ வினைகளால் உண்டாகும் தடைகள், தோஷங்கள், பிணிகள், கவலைகள்நீங்கி தெய்வ திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள், விரதங்கள் பெரிதும் துணை புரிகின்றன.ஆயுள், ஆரோக்யம், புத்திரசம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்ய யோகம் கிடைக்கவும் மன அமைதி, சந்தோஷம் ஏற்படவும் பூஜை, புனஸ்காரங்கள்இருக்கின்றன.
வரலட்சுமி பூஜையை செய்வதாலும், பங்கேற்பதாலும், ஆயுள், ஆரோக்யம், மாங்கல்ய பலம் கிட்டும். கன்னிபெண்களுக்கு திருமண பிராப்தம் கூடி வரும். குழந்தை பாக்ய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும்.
ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும். கணவன்-மனைவி இடையே மனகசப்புகள்,கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.
அந்த வகையில் செல்வத்துக்கு அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யும் விரத பூஜையே வரலட்சுமிபூஜை அல்லது வரலட்சுமி நோன்பாகும். வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும்விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன.
மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. கோயில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல், பிரசாதம் தரலாம். பக்தி, ஸ்லோக புத்தகங்கள் வாங்கி தரலாம்.
இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வைகள் தானம் செய்ய புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். வரலட்சுமிவிரதமிருந்து, மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம். இத்தகைய சிறப்புவாய்ந்த வரலக்ஷ்மி தினத்தில் நடைபெறும் மேற்கண்ட யாகத்திலும் கூழ்வார்த்தல் நிகழ்சியிலும் கலந்துகொண்டு இறையருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025