

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 27.04.2018 சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை திருவோண நக்ஷாத்திரத்தை முன்னிட்டு ஹோமங்களுடன் திருவோண தீபம் சிறப்பு தைலாபிஷேகம் நடைபெறுகிறது.
மூலவர் நோய்கள் தீர்க்கும் தன்வந்திரி ஆகவும், உற்சவர் வைத்தியராஜா ஆகவும், தாயார் ஆரோக்யலக்ஷ்மியுடன் திருவருள்புரியும் திருத்தலமாக வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யத்துடன் ஆனந்தம் தரும் ஔஷதபுரியாக விளங்கி வருகிறது. ஸ்தல தீர்த்தமாக சஞ்சீவி தீர்த்தம் விளங்குகிறது. ஷண்மத பீடமாக விளங்கி வரும் இப்பீடத்தில் 75 பரிவார மூர்த்திகள், சிவலிங்க சொரூபமாக உள்ள 468 சித்தர்களுடன் மூலஸ்தானத்தில் ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் சங்கு சக்கிரத்துடன், அமிருத கலசம், சீந்தல் கொடி, கையில் கத்தியுடன் நின்ற கோலத்தில் அருள் பாவிக்கின்றார். இவரது மார்பில் மகாலட்சுமியும், தலையில் ஆதிசேஷனுடன் புன்முறுவலுடன் பக்தர்களின் உளப்பிணி, உடற்பிணி தீர்க்கும் பெருமாளாக உள்ளார்.
இவர் சாலிக்கிராம மாலை, துளசிமாலை, லட்சுமி மாலை, சந்தன மாலைகள் அணிந்து இடுப்பில் பெல்ட்டுஅணிந்திருக்கிறார். புல்லாங்குழலுடன் உள்ளார். இவர் அருகில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணர் ஆகவும், தூரத்தில் நின்று பார்ப்பவர்களுக்கு உப்பிலியப்பனாகவும், வலது புறமாக பார்ப்பவர்களுக்கு ராதாகிருஷ்ணர் ஆகவும், இடது புறமாக பார்ப்பவர்களுக்கு ஸ்ரீனிவாசராகவும், மொத்தமாக பார்ப்பவர்களுக்கு முருகராகவும் பக்தர்கள் விரும்பும் விதத்திலும் காட்சி தருகிறார். புதன்கிழமை, திருவோணம், ஹஸ்தம், ஸ்வாதி, ஏகாதசி போன்ற நாட்களில் காலையில் அலங்காரமில்லாமல் ‘நேத்திரதரிசனம்’ தருகிறார். மேலும் இவருக்கு இந்நாட்களில் நாடைபெறும் திருமஞ்சனம் மிகவும் விசேஷமானதும் சிறப்பு வாய்ந்ததுமாகும்.
ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி தாயார் ஆரோக்யம், ஐஸ்வர்யம் அருளும் விதத்தில் தனி சந்நதியில் அருள் பாவிக்கின்றாள். இங்குள்ள சக்கிரத்தாழ்வாரை சேவிப்பவர்களுக்கு சத்ரு பயங்கள், எதிரிகள் தொல்லை போன்ற தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தலம் திருவோணம் நட்சத்திரத்திற்குரிய கோயில். திருப்பதியில் வராஹ சுவாமியை வணங்கிய பிறகே வெங்கடாசலபதியை தரிசிக்க செல்ல வேண்டும். அதே விதிமுறைப்படி, இங்கு ஸ்ரீ விநாயக தன்வந்திரி சந்நதியை தரிசித்து விட்டு ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை தரிசிக்க வேண்டும் என்பது ஸ்வாமிகளின் ஆக்ஞையாகும். இங்கு பிரதி மாத திருவோணத்தில் தைலகாப்பு திருமஞ்சனம், தன்வந்திரி ஹோமம், பெருமாள் சந்நதியில் அகண்ட தீபத்தில் நெய் விளக்கேற்றி அதனை சுவாமி பாதத்தில் வைத்து ஆராதிக்கின்றனர். இந்த தீப தரிசனம் மிகவும் விசேஷமானது. திருமண, புத்திர தோஷம் உள்ளவர்கள் தீபத்திற்கு நெய் கொடுத்து வேண்டிக்கொள்கிறார்கள்.
மேலும் பட்டாபிஷேக ராமர், சத்யநாராயணர், பாலரங்கநாதர், கூர்ம லக்ஷ்மி நரசிம்மர், லக்ஷ்மி ஹயக்ரீவர், சஞ்சீவி ஆஞ்சநேயர், செந்தூர ஆஞ்சநேயர், நவக்கிரக ஆஞ்சநேயர், கார்த்தவீர்யார்ஜுனர், போன்ற சந்நதிகளும் உள்ளன. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி“யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு ” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன், அனைவருக்கும் அனைத்து விதமான ஆனந்தம், ஐஸ்வர்யங்கள் கிடைக்க வருகிற 27.04.2019 சனிக்கிழமை திருவோண நக்ஷத்திரத்தை முன்னிட்டு காலை 10.00மணி முதல் 12.00 மணி வரை மஹா தன்வந்திரி ஹோமத்துடன் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு பஞ்ச திரவ்ய திருமஞ்சனமும், ஸ்ரீ விநாயக தன்வதிரிக்கு தைலகாப்பு திருமஞ்சனமும், புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.
திருவோணம் நட்சத்திரத்தில் வாமனன், விபீசனன் மற்றும் அங்காரகன் பிறந்துள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிஷ்ட தெய்வம் ஸ்ரீஹயக்கிரீவர். இது. திருமால் அவதரித்த நட்சத்திரம்.
திருவோண நக்ஷத்திர பூஜையின் பலன்கள் :
நாட்பட்ட நோய்களில் இருந்து நிவாரணம் பெறலாம். பொருளாதார தடைகள் நீங்க பெறலாம், திருவோண பெருமாளின் அருள் பெற்று ஐஸ்வர்யத்துடன் நீதி நெறி தவறாத வாழலாம், சீரிய வழியில் பொருள் தேடலாம்;நியாயத்தை உரைக்கவல்ல நீதிபதி ஆகலாம்; செல்வந்தராகவும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்,சிக்கனத்தைக் கடைப்பிடிக்கலாம், ஆனால், தன்னை அண்டியவர்களுக்கு தான தர்மங்கள் செய்யலாம். பல சாஸ்திரங்கள் அறிந்து தைரியசாலியாகவும், தனவந்தனாகவும் வாழலாம். ஆயகலை அறுபத்துநான்கையும் கற்றலாம், நற்குணமுள்ள மனைவி பெறலாம், செல்வந்தன்; கீர்த்தி, புகழ் பெற்று மனிதநேயம் மிக்கவராகலாம்.
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025