

பல்லாயிர கணக்கான மக்கள் முன்னிலையில் தமிழக ஆளுனர் அவர்கள் வருகை புரிந்து சிறப்பித்து நடைபெற்ற ஆயிரம் தவில் நாதஸ்வர கலைஞர்களின் நாதசங்கம் நிகழ்ச்சியுடன் 16 தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று வைபவ க்ஷேத்ரமாக திகழும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 31.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை திருவோணம் நக்ஷத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு தைலாபிஷேகமும் மஹா தன்வந்திரி ஹோமமும் ஏகாதசி திதியை முன்னிட்டு நெல்லி, முள்ளி பொடி கொண்டு சர்வரோக நிவாரணம் பெற மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்குசிறப்பு திருமஞ்சனமும், நடைபெற உள்ளது.
இன்றைக்கு எத்தனையோ ஹோமங்கள், சிறப்பு வழிபாடுகள், சிறப்பு ஹோமங்கள் என்றெல்லாம் நித்தமும் நடந்து வாலாஜா ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் ஒரு தனித்துவத்துடன் வெளியே அடையாளம் காணப்பட்டாலும், இவை அனைத்துக்கும் பின்னால் சுமார் லட்சம் பக்தர்கள் கைப்படை எழுதிய 54 கோடி தன்வந்திரி மஹா மந்திரங்களை கொண்டு மந்திர மலை எனும் ஔஷதகிரியில் பிரமாண்ட நாயகனாக விஸ்வரூபம் எடுத்து நிற்பவர் சாட்சாத் மருத்துவ கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானும் யக்ஞபுருஷரான ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளும் தான்!
இந்த யக்ஞ பூமியின் நாயகர்கள் இவர்கள் தான். இவர்கள் தான் அனைத்துக்கும் ஆதாரம். இன்றைக்கு தன்வந்திரி பீடம் தேடி வரும் பல லக்ஷகணக்கான பக்தர்களின் பிணிகளைத் தீர்த்து, அவர்களின் துயரங்களை வேரோடு களைந்து வரும் தன்வந்திரி பீடத்தில் அன்னபூரணி, காயத்ரி தேவி, சஞ்சீவீ ஆஞ்சநேயர், மஹா அவதார பாப,மஹிஷாசுர மர்த்தினி, குபேர லக்ஷ்மி, அஷ்ட நாக கருடன் என75 க்கும் மேற்பட்ட பரிவார சந்நிதிகளுடனும், 468சித்தர்களுடனும் வைத்ய ராஜ்யம் நடத்தி வருகிறார் ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பகவான். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி மூலவர் ஸ்ரீதன்வந்திரி பகவானுக்கும் உற்சவர் வைத்தியராஜனுக்கும் மேற்கண்ட தினங்களில் ஹோமமும் நெல்லி பொடி அபிஷேகமும் தைலாபிஷேகமும் நடைபெறுகிறது.
திருமாலை போற்றி வழிபடும் நாட்களில் திருவோணம் நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மகாபலிக்கு அருள் தந்த வாமனராகிய திருமால் அவதரித்த நாளும் திருவோணம்தான். அன்னாளில் விஷ்ணுவாகிய தன்வந்திரி பகவானை வழிபடுவதன் மூலம் கலியுகத்தின் கண்கண்ட தெய்வமும், காக்கும் கடவுளுமானவரின் பரிபூரண அருள் கிடைக்கும். இவற்றை கருத்தில்கொண்டு ஆரோக்யம், ஆனந்தம், ஐஸ்வர்யம், மன அமைதி மற்றும் எட்டு வகையான சந்தோஷங்களை அள்ளித்தரும் திருவோண ஹோமம், தன்வந்திரி ஹோமம், தைலாபிதேகம், நெல்லி முள்ளி திருமஞ்சனம் நடைபெறுகிறது.
திருவோண ஹோமத்திலும், தன்வந்திரி ஹோமத்திலும் மேலும் நீரிழிவு நோய் (சர்க்கரை வியாதி), கை கால் வலி,மூட்டு வலி, தூக்கம் இன்மை, வலிப்பு நோய், போன்ற நோய்கள் நீங்க தன்வந்திரி பீடத்தில் ஒரே கல்லில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயக தன்வந்திரிக்கு நடைபெறும் தைலாபிஷேகத்திலும், மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கு நடைபெறும் நெல்லி, முள்ளி பொடி அபிஷேகத்திலும் கலந்துகொண்டு தைலப்பிரசாதம், நெல்லிப்பொடி தீர்த்த பிரசாதம் பெற்று ஆரோக்யத்தில் முன்னேற்றம் பெற பிராத்திக்கின்றோம். இதில் பங்கேற்க விரும்பவர்கள்நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், வெல்லம், சுக்கு, மிளகு, நல்லெண்ணை, பழங்கள்,புஷ்பங்கள், வஸ்திரங்கள் கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்டஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025