

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் தமிழக பா.ஜ.க. ஊடகப்பிரிவு தலைவர்திரு. ஏ.என்.எஸ். பிரசாத் அவர்கள் 28.09.2019 சனிக்கிழமை வருகை புரிந்தனர். மேலும் அமாவாசை முன்னிட்டு பீடத்தில் நடைபெற்ற நிகும்பலா யாகத்திலும், ஸ்ரீ சொர்ண கால பைரவர் அபிஷேக ஆராதனைகளிலும், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு நடைபெற்ற திருத்தேர் பவனியிலும் பங்கேற்று சங்கல்பம் செய்து பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசிகளை பெற்றனர். பின்னர் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் மட்டுமின்றி ஸ்ரீ பாரத மாதா, சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள், ஸ்ரீ வாஸ்து பகவான், பாதாள சொர்ண சனீஸ்வர் போன்ற இதர பரிவார மூர்த்திகளையும் தரிசனம் செய்து வழிபட்டனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025