

இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 21.08.2021 சனிக்கிழமை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை உலக மக்களின் உடல் நோய் மன நோய் நீங்கவும், சகல தோஷங்கள் நிவர்த்தியாகவும் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி "கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, விநாயகர் தன்வந்திரிக்கும் மூலவர் தன்வந்திரி பெருமாளுக்கும் உற்சவ மூர்த்திக்கும் தன்வந்திரி ஹோமத்துடன் தைலாபிஷேகமும் நடைபெறுகிறது.
தன்வந்திரி பகவான் யார் : தன்வந்திரி பகவான் நோய் தீர்க்கும் கடவுள் இவர் மகா விஷ்ணுவின் அவதாரம் கைகளில் அமிர்த கலசம் ஏந்தியவர் மருத்துவ கடவுள் உலக மக்களின் உடல் பிணி உள்ளத்து பிணி நீக்கி ஆயுஙள ஆரோக்கியத்தை தருபவர், இவரை வழிபடுவதால் அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தைலாபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள்:
இங்கு தைலம் என்பது நல்லஎண்ணையை கொண்டு தன்வந்திரி பகவானுக்கு மூலமந்திர ஜபத்துடன் அபிஷேகம் நடைபெற உள்ளது. நல்லஎண்ணை என்பது எள் விதையிலிருந்து எடுக்கப்படுவதாகும். எள் என்பது சனீஸ்வர பகவானுக்கு வேண்டிய விஷேச திரவியமாகும்.எள்ளை கொண்டு தான் சனிகிரக தோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரபிரித்தியாக எள்ளு தானமும், எள்ளு ஹோமமும், எள்ளு எண்ணையை கொண்டு தெய்வங்களுக்கு எண்ணை காப்பு சாற்றுவது போன்ற வைபவங்களுக்கு சனி பிரித்தியாக கருதுகிறோம். இத்தகைய எண்ணையினால் நோய் தீர்க்கும் கடவுளான தன்வந்திரி பகவானுக்கு தைலாபிஷேகமாக செய்வதால் நோய் உற்றவர்கள் விரைவில் குணமடையவும், நீரிழிவு நோய், மூட்டு வலி, ஆயுள் தோஷம் நீங்கவும், மனத் தடைகள், மன நோய்கள் நீங்கவும், நவக்கிரகங்களால் ஏற்படும் நோய்கள் மற்றும் கஷ்டங்கள் குறையவும், ஏழரை சனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டம சனி போன்ற சனிகிரகத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் நீங்கவும், வாய் புண், வயிற்றுபுண், குடல் சம்மந்தமான நோய்கள், கண் சம்மந்தமான நோய்கள், ஆரோக்கிய சம்மந்தமான குறைகள் நீங்குவதற்க்கு வழிவகை செய்யும்.
மேற்கண்ட யாகத்திலும் அபிஷேகத்திலும் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
MORE DETAILS PLEASE CONTACT 94433 30203
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025