

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் 23.07.2017 முதல் 30.07.2017 வரை உலக நலன் கருதியும் சகல ஐஸ்வர்யம் பெறவும் சஹஸ்ர சண்டி யாகம் நடைபெற்று வருகிறது. இதன் நிறைவு 30.07.2017ல் மாலை மஹாபூர்ணாஹுதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அன்று காலை 10.00 மணிக்கு பெண்கள் திருமணத் தடை நீக்கும் சுயம்வர கலா பார்வதி ஹோமம் நடைபெற உள்ளது.
சுயம்வர கலா பார்வதி ஹோமம்ஒவ்வொருவருக்கும் வாழ்வில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது திருமணம் ஆகும். அந்த திருமண நிகழ்வு பல தோஷங்களால் தடைபட்டு திருமணம் நடப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது. இந்த திருமணத் தடைகளை நீக்கி விரைவில் திருமணம் ஆவதற்கு வழிவகை செய்யும் சுயம்வரகலா பார்வதி ஹோமம் ஆகும். இந்த பார்வதி ஹோமம் என்பது பார்வதி தேவிக்காக செய்யப்படுவதாகும். அவ்வாறு செய்யப்படும் சுயம்வரகலா பார்வதி ஹோமத்தில் சொல்லப்படும் மந்திரம் தேவி பார்வதி அவர்களே சிவபெருமானை போற்றிச் செய்தது என்றும், அந்த ஹோமத்தை செய்ததின் விளைவாக தேவி பார்வதி சிவபெருமானை மணந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே திருமணங்கள் ஆகாதவர்கள் அவர்களது திருமணத் தடங்கல்களை முழுமையாக நீக்கி அவர்களுக்கு நல்ல முறையில் உடனே திருமணம் நடப்பதற்காக இந்த ஹோமம் செய்யப்படுகிறது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரக தோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்படுகிறது. பின்னர் திருமணம் உடனே நடக்க வேண்டி சங்கல்பம் செய்து இறுதியாக சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடைபெற உள்ளது.
இந்த ஹோமத்தில் பங்கேற்பதால் சர்பதோஷம், ராகுதோஷம், செவ்வாய் தோஷம் மற்றும் நவக்கிர தோஷங்கள் நீங்கி பெற்றோரின் ஆசிகளுடன் திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், கணவனுக்கு ஏற்ற மனைவியும், மனைவிக்கு ஏற்ற கணவகும் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025