

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் உலக மக்களின் நலன் கருதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி சந்தான கோபால யாகம், கந்தர்வராஜ ஹோமம், சுயம்வரகலா பார்வதிஹோமம் நடைபெற உள்ளது.
சந்தான கோபால யாகம் 19.08.2017 சனிக்கிழமை.குழந்தை பாக்யம் இல்லாத தம்பதியர்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்க வேண்டி 19.08.2017 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 சந்தான கோபால யாகம் நடைபெற உள்ளது. இந்த யாகம் செய்வதின் மூலம் அடையும் பலன்கள் ஏராளம். எல்லாவிதமான தடைகளும் நீங்கி விரைவில் குழந்தை பாக்யம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம். தம்பதியருக்குள் மிகுந்த அந்யோன்யம் ஏற்படும். நவநீத கிருஷ்ணனின் பரிபூரண அருளும் கிடைக்கும்.
கந்தர்வ ராஜ ஹோமம் 20.08.2017. ஞாயிற்றுகிழமை.திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற 20.08.2017. ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் பங்குபெறுபவர்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடக்க வழிவகை செய்கிறது. இதில் பங்கேற்க்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம் நடைபெறும். ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் சென்ற 12 ஆண்டுகளில் ஏறக்குறைய சுமார் 3000க்கும் மேற்பட்ட கந்தர்வராஜ ஹோமங்கள் நடைபெற்று எண்ணற்ற ஆண்கள் பங்கு பெற்றுபயனடைந்துள்ளார்கள்
சுயம்வர கலா பார்வதி ஹோமம் 27.08.2017 ஞாயிற்று கிழமை.இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் மூலம் அடையும் பலன்கள் ஏராளம். எல்லாவிதமான திருமணத் தடைகளும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.
அந்த வகையில் வருகிற 27.08.2017 ஞாயிற்று கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை சிறந்த வேத விற்பனர்களை கொண்டு சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடைபெற உள்ளது. மேலும் இதில் பங்கேற்கும் நபர்களுக்கு கலசாபிஷேகம் செய்து அன்னதானமும் வழங்கப்படும். ஸ்ரீதன்வந்திரி பகவானின் ஆசி பெறுவதற்கு ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
Tamil version
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025