

வேலூர் வாலாஜாபேட்டை அனந்தலைமதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற ஜீலை மாதம் 12 ம் தேதி செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில்ஸ்ரீசுதர்சனர் ஜெயந்தியை முன்னிட்டு மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ மாபெரும் ஜீலை 10 ம் தேதி ஞாயிறு முதல் 12ம் தேதி செவ்வாய் கிழமை வரை இலட்ச ஜபஹோமத்துடன் மகாசுதர்சன ஹோமம், நடைபெறுகிறது.
ஸ்ரீசுதர்சன ஹோம பலன்கள்
வாழ்வில் பல நன்மைகளைப் பெறுவதற்கு நாம் ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்வது அவசியம். இதன் பலன்கள் ஏராளம். பொதுவாக, பல வகையான ஹோமங்கள், ஏதோ குறிப்பிட்ட ஒரு நற்பலனை உத்தேசித்து மட்டுமே செய்யப்படுபவை. ஸ்ரீசுதர்சன ஹோமம் பல நற்பலன்களைக் கொடுக்க வல்லது.தீர்க்கஆயுசு பெறவும் பூரண ஆயுள் கிடைக்கவும், நினைத்தது நிறைவேறவும் அஷ்டஐஸ்வர்யம் பெறவும், புத்தியில்தெளிவு கிடைக்கவும், ஆபத்துக்கள்வராமல் தடுக்கவும்,பசுவிருத்தி ஏற்படவும் வீட்டில்உள்ள பசு அதிகம்பால்சுரக்கும், பசுவைஎந்தநோயும்அண்டாது இருக்கவும்,சுகப்பிரசவம் ஆகவும், சுபிட்சங்கள்பெறவும், பசுவிருத்தியாகவும்! எதிரிகள்தொல்லை நீங்கவும்! மன நலம் குணமாகவும்,புத்தி பேதலித்தவர்கள் நலம் பெறவும்,. விரைவில் மனோபலம் பெறவும்,தீராத நோய்கள் தீரவும், கேன்சர், சர்க்கரை வியாதி போன்ற கண்ணுக்குத் தெரியாத நோய்கள் நீங்கவும் கோபம் தணியவும்,குருவை அவமதித்த பாவம், சாதுக்களைத் திட்டிய சாபம், பெரியவர்களை மதிக்காமல் போன பாவம் நீங்குவதற்கும் இந்த ஹோமத்தின் மூலம் பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.
விஷேசமாக சேர்க்கப்பட உள்ள ஹோம திரவியங்கள்
சுதர்சன ஹோமத்தில் வெண்கடுகு,எள், கடுகு, தாமரைப்பூ, வில்வ இலை, பால் பாயசம்,அருகம்புல்,சர்க்கரைபொங்கல்,தயிர்,நாயுருவி,,ஆலமரசமித்து,நெய்,பஞ்சகவியம்,கருநொச்சி,இருமுள்,நீலஊமத்தபூ,வெள்ளைபுலாச்சு,குக்கிலு,சம்மதபூ,வெண்பட்டு போன்ற பொருட்கள் ஹோமத்தில் சேர்க்கப்பட உள்ளது.
16 விதமான அபிஷேக திரவியங்களுடன் மகா அபிஷேகம்
சுதர்சன பெருமாளுக்கரிய 16 விதமான அபிஷேக திரவியங்களை கொண்டு மகா அபிஷேகமும் விஷேச அர்ச்சனையும் தன்வந்திரி பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தலைமையில் நடைபெறுகிறது பக்தர்கள் அனைவரும் இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹோமத்தில் பங்பேற்று சுதர்சன பெருமாளின் அருள் பெற்று நலம் பெற ப்ரார்த்திக்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு,
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்,
கீழ்புதுப்பேட்டை, அனந்தலை மதுரா,
வாலாஜாபேட்டை.632513 phone 04172-230033.230274
www.danvantritemple.org , www.danvantripeedam.blogspot.in , danvantripeedam@gmail.com
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025