Sri Ramar 139th Jayanthi Festival

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் பெற்றோர்கள் ஆசியுடன் 20 க்கும் மேற்பட்ட மஹான்களும் 468 சித்தர்கள் சிவலிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு அவர்களின் ஜெயந்தி விழாவும், ஆராதனை விழாவும் உலக நலன் கருதி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற ரமணர் ஜெயந்தி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மஹான்களின் அருள் பெற்றனர்.

ரமணர் மதுரை அடுத்த திருச்சுழி கிராமத்தில் 1879ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தார். இவரது இயற்பெயர் வேங்கடராமன். சிறுவயதிலேயே அண்ணாமலையாரால் அருள்பெற்று திருவண்ணாமலை வந்தார். கோயிலில் உள்ள பாதாள லிங்கம் அமைந்துள்ள இடத்தில் கடும் தவமிருந்தார். தனது தவ வலிமையால் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார். பல்வேறு தத்துவங்களால் அனைவரையும் கவர்ந்த ரமணர் கடந்த 1950ம் ஆண்டு முக்தியடைந்தார். தன்வந்திரி பீடத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரமணர் பிறந்த நட்சத்திரத்தன்று ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

அதன்படி, ரமணர் அவதரித்த மார்கழி புனர்பூசம் நட்சத்திர தினமான நேற்று 24.12.2018 திங்கள்கிழமை 139வது ஜெயந்தி விழா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது. அதனை முன்னிட்டு நேற்று அதிகாலை மங்கள இசை, ருத்ர ஹோமம், மஹாபிஷேகம், சதுர்வேத பாராயணம், மஹா தீபாராதனை, இறை பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. இதில் ஓம் சக்தி பக்தர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images