

வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரிஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலைஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 17.10.2017 செவ்வாய்க்கிழமை திரயோதசி திதி, தன்வந்திரி ஜெயந்தி, உலக ஆயுர்வேத தினம் மற்றும் 18.10.2017 புதன் கிழமை மாதாந்திர சிவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் 19.10.2017 வியாழக்கிழமை ஐப்பசி அமாவாசை மற்றும் 20.10.2017 வெள்ளிக்கிழமை கந்த ஷஷ்டி மற்றும் ஸ்வாமிகளின் 58-ம் ஆண்டு அவதார தினத்தை முன்னிட்டு காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள், அன்னதானம் மற்றும் நலதிட்ட உதவிகள் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ தன்வந்திரி பீடம், ஒரு வாழ்வியல் மையம் :
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதில் இருந்து முதலில்தோன்றியவர் தன்வந்திரி. ஆயுர்வேத மருத்துவத்தைத் தோற்றுவித்தவர் தன்வந்திரி பகவானுக்கு என்று தனிக்கோவில் வேலூர்மாவட்டம் வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டைகிராமத்தில் உள்ளது. இங்கு வாழ்வியல்முறைகளை விளக்கும் விதமாக மூலிகை ஆராய்ச்சி,வானிலை ஆராய்ச்சி, ஜோதிட ஆராய்ச்சி, வேதஆகமங்கள் ஆராய்ச்சி, அறிவியல், சமூகம், கலை, பண்பாடு,சமயம், பாரம்பரிய சம்பிரதாயங்களை பலரும் அறிந்து தெரிந்துபயன்பெறும் விதத்திலும், வாழ்வியல் முறையில் பல உண்மைகளை தெரிந்துகொள்ளும் விதத்தில் உலக வாழ்வியல் மையமாக அமையப்பெற்றுள்ளது.
உலக தரச்சான்றிதழ்கள் பெற்றுள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடம் :
சுற்றுச்சூழலுக்காக ஐ.எஸ்.ஓ.14001, ஐ.எஸ்.ஓ. 9001-2008 ஆகியஉலக தரச்சான்றிதழ்பெற்ற பெருமையும் இந்த பீடத்திற்கு உண்டு.
ஸ்ரீ தன்வந்திரி பீடமும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளும்:
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் நிறுவனர் முரளிதர சுவாமிகள். இவர்தன் தாய்க்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றகடந்த 1995-ம்ஆண்டு ஸ்ரீமாருதியின் உதவிக்கரங்கள் என்ற அமைப்பை உருவாக்கினார்.பெற்றோர்களை குருவாக ஏற்று ஸ்தாபகர்மற்றும் பீடாதிபதியான கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள் 75சன்னதிகள், சிவலிங்கரூபமாக 468 சித்தர்கள்,மற்றும் பெற்றோர்களுக்கும் ஆலயம் அமைத்து வழிபாடுசெய்து வருகிறார். குரு பீடமாக பக்தர்களால் போற்றும் விதத்தில் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்யபீடத்தை அமைத்துள்ளார். இப்பீடம் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டையில் இருந்து மூன்றுகிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மந்திரமே யந்திரம் :
கலி காலத்தில் அழியாமல்இருக்க ஐம்பத்திநான்கு கோடி தன்வந்திரி மஹாமந்திர ஒலிகளுடன் தோன்றிய மகத்தான தலம்என்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.இந்த பீடம் ஒளஷத பீடமாகஅமைந்து ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் என்றபெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்துவருகிறார். இறைவியின் நாமம் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி என்பதாகும்.
468 சித்தர்கள் ஸ்தலம்:
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்யபீடம், சித்தர்கள் ஸ்தலமாக விளங்கி வருகிறது.இந்தக் கோவிலின் எட்டு திக்குகளிலும் திருசன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மத்தியில் மூலவர் ஸ்ரீ தன்வந்திரி9 அடிஉயரத்தில் 46 லட்சம்பக்தர்கள் கைபட எழுதிய 54கோடி தன்வந்திரி மந்திரங்களுடன் நின்ற கோலத்தில் உள்ளார்.ஷண்மதங்களுக்கு உரிய தலமாகவும் இதுவிளங்குகிறது.
இத்தலத்தில் உள்ள இறைவன் இரண்டுலட்சம் கிலோ மீட்டர் கரிக்கோலம்வந்து 63 திவ்ய தேச பெருமாளின்அபிமானத்தை பெற்றவர். மருத்துவ அவதாரம் என்பதால் பிணிதீர்க்கும் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். சக்ரபீடம், யந்திர பீடம், மந்திரபீடம், சஞ்சிவி பீடம், யக்ஞபீடம், சித்தர்கள் பீடம், துர்கா பீடம்,காயத்ரி பீடம் என்று பலபெயர்களில் பக்தர்கள் இப்பீடத்தை அழைப்பதுண்டு. ஸ்ரீ தட்சிணா மூர்த்தி குருபகவான் தன்வந்திரிஆலயத்தில் வல்லலார், இராகவேந்திரர், காஞ்சி மஹா பெரியவர்,சீரடி சாயிபாபா இடையில் ராஜகுருவாக எழுந்தருளிஅருள்பாலித்து வருகிறார்.
தன்வந்திரி ஜெயந்தியும் ஸ்வாமிகள் அவதார தினமும் :
இந்த பீடத்தில் ஆண்டுதோறும் தன்வந்திரி ஜெயந்தி விழாவும் ஸ்வாமிகளின் அவதார தினமும் ஒன்றாக வருவது மிகவும் சிறப்பு. என்பதால், இந்த நாட்களில் ஹோமங்களும், பூஜைகளும் சிறப்பாக நடைபெற்று வருவது பக்தர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.இங்குள்ள தன்வந்திரியை வழிபாடு செய்தால் ஆரோக்யத்துடன் கல்விச் செல்வம், பொருட்செல்வம்,குழந்தைச் செல்வம் உள்பட அனைத்துசெல்வங்களும் எளிதில் கிட்டும் என்பதுபக்தர்களின் நம்பிக்கை.
இந்த ஆண்டு வருகிற 17.10.2017செவ்வாய்க்கிழமை திரயோதசி திதி, தன்வந்திரி ஜெயந்தி, உலக ஆயுர்வேத தினம் மற்றும் 18.10.2017 புதன் கிழமை மாதாந்திர சிவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் 19.10.2017வியாழக்கிழமை ஐப்பசி அமாவாசை மற்றும் 20.10.2017வெள்ளிக்கிழமை கந்த ஷஷ்டி மற்றும் ஸ்வாமிகளின் 58-ம் ஆண்டு அவதார தினத்தை முன்னிட்டு காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள், ஹோமங்கள், அபிஷேகங்கள், ஆராதனைகள், அன்னதானம் மற்றும் நலதிட்ட உதவிகள் நடைபெறவுள்ளது.
தன்வந்திரியின் சிறப்புகள் :
தன்வந்திரி பெருமாள் மகா விஷ்ணுவின் அம்சம். பன்னிரு கரங்களில் சங்கு சக்கரத்தை, ஒரு கரத்தில் அமிர்த்த கலசம், மற்றொரு கரத்தில் சீந்தலைக் கொடியுடன் காட்சி அளிக்கின்றார். அக்காலத்தில் மருத்துவ முறையில் நோயை உடலில் இருந்து விரட்ட, கெட்ட ரத்தத்தை உறுஞ்சி எடுத்து, நோயை குணமாக்க அட்டை பூச்சிகளை பயன் படுத்தினர். இப்போதும், இந்த முறையை தற்கால மருத்துவம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனால்தான், தன்வந்திரி விக்கிரகத்தில் அட்டை பூச்சி இடம் பெற்றுள்ளது.
தன்வந்திரியும் தன்வந்திரி ஜெயந்தியும் :
தன்வந்திரி அவதார தினத்தையொட்டி இப் பீடத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ஸ்ரீ தன்வந்திரி சன்னதி முன்பு பக்த்தர்கள் தன்வந்திரி மஹாமந்திரத்தை உச்சரித்து கொண்டு நெய், வெள்ளம், சுக்கு, மிளகு, திப்பிலி, அரிசி மாவு கொண்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் திருக்கரங்களால் தன்வந்திரி லேகியத்தை தயாரித்து தன்வந்திரிக்கு நிவேதனம் செய்து தீபாவளியன்று பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படவுள்ளது.
அமைவிடம்:
வேலூரில்இருந்து கிழக்கே 25 கிலோமீட்டர்தொலைவில் கீழ்புதுபேட்டை என்னும் கிராமத்தில் இத்தலம்அமைந்துள்ளது. வேலூரில் இருந்துதிருத்தணி-திருப்பதி செல்லும் சாலையில் தலங்கை கிராஸ் என்ற பகுதியில்இருந்து ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்குசாலை பிரிந்து செல்கிறது. வாலாஜாபேட்டையிலிருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர்தெரிவித்தனர்.
Tamil version
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025