

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இன்று 09.04.2017 பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காலை ஸ்ரீ சக்கரத்துடன் ஸ்ரீ மகாமேரு ப்ரதிஷ்டை சிறப்பாக நடைபெற்றது.
பங்குனி உத்திரத்தின் மகிமைமாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு. நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தைச் செய்யும் போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வங்களும் அவர்களது திருமணங்களை நல்ல நாட்களில் நடத்தி இருப்பர். அதன்படி, உத்திரத்திற்கு தெய்வங்களே சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு. அதாவது பார்வதி - பரமேஸ்வரன், தெய்வயானை- முருகன், ஆண்டாள் - ரங்க மன்னார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என் பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில் தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இதைவிடச் சிறப்பான மற்றொரு விஷயம், ராமாயணத்தில் வரும் தசரதச் சக்ரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் பங்குனி உத்திரத்தில் தான் தங்களது திருமண வாழ்க்கையில் நுழைந்துள்ளனர். தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது. வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜ்ஜுனன் தோன்றியதும் இந்த நந்நாளில் தான்.
இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் இன்று ஞாயிறு காலை 4..30 மணிமுதல் 6.00 மணி வரை தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதரஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி ஸ்ரீசக்கர யந்திரத்துடன் மகாமேரு ப்ரதிஷ்டையும் ஸ்ரீ பாரதமாதா, ஸ்ரீலட்சுமி கணபதிக்கு புனர் பிரதிஷ்டையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஸ்ரீ பாரதமாதா ,ஸ்ரீ லட்சுமி கணபதி, ஸ்ரீ மகாமேருவிற்கு. சிறப்பு அபிஷேகமும் புஷ்பாஞ்சலியும் நடைபெற்றது. மற்றும் ஸ்ரீ மகாவீர்ர் ஜெயந்தி,ஸ்ரீ ஐயப்பன் அவதார தினத்தையொட்டி சிறப்பு பால் அபிஷேகமும் விஷேச பூஜையும் நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உலக நலன் கருதி ப்ரார்த்தனை செய்தனர்..நாளை 10.04.2017 திங்கட் கிழமை காலை 10.00 மணியளவில் பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ மகாமேருவிற்கு நவாவர்ண பூஜையும் 468 சித்தர்களுக்கும் மகான்களுக்கும் ராகுகேது, ஸ்ரீஅன்னபூரணிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025