

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகளின் ஜெயந்தியை முன்னிட்டு இன்று 02.05.2017 செவ்வாய் கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணிவரை ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகளின் மூலமந்திர ஜப ஹோமமும் மஹா அபிஷேகமும் நடைபெற்றது.
குழந்தையானந்த மஹா ஸ்வாமிகள் மதுரையில் பிறந்தவர். மதுரை மீனாட்சியால் அரவணைக்கப்பட்டு வளர்ந்தவர். பலமாநிலங்களுக்கு சென்று ஆன்மீகத்தை பரப்பியவர். பலவிதமான சித்துக்களை செய்துவந்தவர். காசியில் உள்ள காலபைரவர் கோயிலில் பல நாட்கள் தவம் செய்தவர். ஒரே நாளில் நான்கு இடத்தில் ஜீவசமாதிஆனவர்.
ஸ்ரீ சேஷாத்திரி ஸ்வாமிகளின் குருநாதராகவும் விளங்கியவர். மஹாராஜாக்களால் பூஜிக்கப்பட்டவர். த்ரைலிங்கேஸ்வரர் என்ற நாமத்துடனும் வாழ்ந்து வந்தவர். அவதூதர்,இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீ மஹா ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகளுக்கு தன்வந்திரி பீடத்தில் 5 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் தனி சந்நிதி அமைத்து ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பூஜித்து வருகிறார்.அத்தகைய சித்தபுருஷரின் ஜெயந்தி விழா விசேஷ ஹோமம், அபிஷேகம், ஆராதனையுடன் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது இந்த பூஜையில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் திரு.பாஸ்கர் மற்றும் திரு.சேகர் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025