

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி வருகிற 02.12.2019 திங்கட்கிழமை ஷஷ்டி திதியை முன்னிட்டு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஸ்ரீ கார்த்திகை குமரன் சன்னதியில் சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற உள்ளது.
சத்ரு சம்ஹார ஹோமத்தில் கலந்து கொள்ளும் அன்பர்களுக்கு சத்ரு தொல்லை நீங்கி இழந்த பதவிகள் பெறலாம், வாழ்வில் முன்னேற்றம் பெற ஆறுமுகபெருமான் அருள்புரிவார். மேலும் பூர்வ வினை, பாவம் போகும். குறைவில்லாத, வளமையான வாழ்வு மிகுத்து வரும். முருகப் பெருமானை வணங்குபவருக்கு எல்லா நலன்களும் கிட்டும்.
முக்கியமாக தன்வந்திரி பீடத்தில் உள்ள கார்த்திகை குமரனை வணங்குபவர்களுக்கு கிட்டாத நன்மையே இல்லை எனலாம். பூமி தோஷம் நீங்க, புற்று நோய் அகல, வெளிநாடு செல்ல, வேலை வாய்ப்பு பெற, புத்திர விவாகம் விறைந்து நடைபெற, ஊனம் அகல, கண்பார்வை தெளிவடைய, வாதசுரம் நீங்க, சுப்ரமண்ய சத்ரு சம்ஹார ஹோமத்தில் பல்வேறு மூலிகைகள், பழங்கள், புஷ்பங்கள் சேர்க்கப்பட உள்ளது. இந்த யாகத்தில் கலந்து கொண்டு முருகரை வணங்கி வந்தால் வாழும் காலத்திலேயே பூலோக சொர்க்கம் காணலாம். இரந்த பின் மேலோக சொர்க்கமும் அடையலாம் என்பதில் ஐயமில்லை என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஹோமத்தில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்று இறையருளுக்கு பாத்திரமாகும்படி கேட்டுகொள்கிறோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025