

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் அமாவாசையை முன்னிட்டு வருகிற 26.11.2019 செவ்வாய்கிழமை காலை 11.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை சூலினி துர்கா ஹோமத்துடன் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளது.
உறவுப பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவும், தீய விளைவுகள் நீங்கவும், ராகு தோஷத்திலிருந்து நிவர்த்தி பெறவும், மன அழுத்தம், பதட்டம் குறையவும், அனைத்து செயல்களிலும் நம்பிக்கை கிடைக்கவும், குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கவும் நடைபெறும் இப்பெரும் சக்தி வாய்ந்த ஹோமம் துர்கா தேவியின் அளப்பரிய, தெய்வீக ஆற்றலை உணரவும், அதைப் பெற்று, அன்றாட வாழ்க்கையில் பயன் பெறவும் வகை செய்கிறது.
இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, நம்மை வாட்டி வதைக்கும் அனைத்து தீமைகள், சந்தேகம், குழப்பம் போன்ற எதிர்மறை உணர்வுகள் ஆகியவற்றுக்கு எதிராக, வலுவான பாதுகாப்பு பெற்று, சகல திருஷ்டிகளையும், தோஷங்களையும் நீங்கி விரைவில் திருமணம் கைகூடும் ஹோமம் சூலினி துர்கா ஹோமம் ஆகும். மேலும் தடைகள் நீங்கும், தீய சக்திகள் அகலும், முற்பிறவி சாபம் விலகும், பிதுர் தோஷம், சாபங்களை போக்கும் உன்னத யாகமே சூலினி துர்கா யாகமாகும். நவக்கிரக தோஷங்கள், செய்வினை, ஏவல், பில்லி சூன்யம், வசியம் போன்ற மாந்திரீக கோளாறுகளால் ஏற்பட்ட பிரச்னைகள் மற்றும் எதிரி தொல்லைகளில் இருந்து விடுபடவும் இந்த சூலினி துர்கா ஹோமம் நடைபெறுகிறது.
ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினி தேவியின், ஆசிகளைப் பெற இந்த ஹோமம் நடத்தப்படுகின்றது. மண வாழ்க்கை மற்றும், உறவுகளில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க நடைபெறும் இந்த ஹோமத்தில் பங்கேற்பதன் மூலம் கோபம், பொறாமை, ஆணவம், சுயநலம், வெறுப்பு போன்ற தீமைகள் அகலும் பெரும் சக்தி வாய்ந்த துர்கா தேவியின் அளப்பரிய, தெய்வீக ஆற்றலை உணரவும், அதைப் பெற்று, அன்றாட வாழ்க்கையில் பயன் பெறவும் வகை செய்கிறது. ஆகவே இந்த ஹோமத்தில் பங்கு கொண்டு, நம்மை வாட்டி வதைக்கும் அனைத்து தீமைகள், சந்தேகம், குழப்பம் போன்ற எதிர்மறை உணர்வுகள் ஆகியவற்றுக்கு எதிராக, வலுவான பாதுகாப்பை பெறலாம் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
மேற்கண்ட ஹோமங்கள் நடைபெற்று ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ள
து. இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் மஹா யாகத்திற்கு புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025