

திங்கள் கிழமை வரும் பிரதோஷம் சோமவார பிரதோஷமாகும். இந்த பிரதோஷத்தின் மகிமை என்னவென்றால் மனிதர்களின் தோஷமான பாவத்தை நீக்குவதால் பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. தன்வந்திரி பீடத்தில் வருகிற 12.08.2019 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு சோமவார பிரதோஷம் நடைபெறுகிறது.
பிரதோஷ காலம் :
உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்கு தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக் கொண்டார் இறைவன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம். பிரதோஷம் நித்ய பிரதோஷம் ,மாதப் பிரதோஷம், மஹா பிரதோஷம் என்று மூன்று வகைப்படும்.
சோமவார பிரதோஷம் :
பிரதோஷ நாள் அன்று ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நந்தி பீடத்தில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு பாவங்கள் அனைத்தும் விலக வேண்டி பால், சந்தனம், இளநீர், விபூதி கொண்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரருக்கு வலம்புரி சங்குடன் மஹாபிஷேகம் நடை பெற உள்ளது. அபிஷேகம் செய்து வில்வ மாலை, அருகம்புல், திராட்சை மாலை அணிவித்து வழிபாடு நடைபெற உள்ளது.
இப்பிரதோஷ பூஜையின் மூலம் திருமண தடை நீங்கும் ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷம், ராகு கேது போன்ற நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும். தொழில் மேன்மை அடையும் ,கடன் பிரச்சனை தீரும், போட்டி தேர்வு எழுதுபவர்களுக்கு எளிதில் வெற்றி கிட்டும். சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும். .ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும்.
பிரதோஷ பூஜையை தொடர்ந்து சிவலிங்க ருபமாக உள்ள 468 சித்தர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது தனி சிறப்பாகும். வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்திற்கு பிரதோஷ நாளில் வருகை புரிந்து ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரரையும், 468 சித்தர்களையும், குழந்தயானந்த ஸ்வாமிகள், ராமலிங்க அடிகளார், ராமகிருஷ்ண பரமஹம்சர், அகத்தியர், மஹா அவதார பாபா, சீரடி சாயிபாபா, தங்க பாபா, ராகவேந்திரர், ஜகத்குரு காஞ்சி சந்திரசேகர ஸ்வாமிகள், குருதேவ், மஹாவீர், ரமணர், புத்தர், வீரபிரம்மங்காரு, சேஷாத்திரி ஸ்வாமிகள், வேதாந்த தேசிகர் போன்ற பல்வேறு மஹான்களையும் தரிசித்து பிறந்த பலனை அடையலாம்.
பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் - பல வளமும் உண்டாகும், தேன் - இனிய சாரீரம் கிடைக்கும். பழங்கள் - விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும், நெய் - முக்தி பேறு கிட்டும். இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் - சுகவாழ்வு, சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும். பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன்,வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும் பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் நடைபெறும் அபிஷேகத்திற்கு மேற்கண்ட பலன்களை பெற மேற்கண்ட பொருட்களை அளித்து நன்மை பெறலாம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025