

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் 183 ஆவது ஜெயந்தியை முன்னிட்டு இன்று 20.02.2019 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை இப்பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு சிறப்பு ஹோமத்துடன் அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ தன்வந்திரி பகவான், ஆரோக்ய லக்ஷ்மி, மரகதாம்பிகை, மரகதேஸ்வரர்,சத்யநாராயணர், கூர்ம லக்ஷ்மி நரசிம்மர் போன்ற பல்வேறு தெய்வங்கள் மட்டுமின்றி காஞ்சி மஹா பெரியவர், ராகவேந்திரர்,மஹாவீரர், வள்ளலார், ரமணர், சேஷாத்ரி ஸ்வாமிகள், மஹா அவதார பாபா, வீரபிரம்மங்காரு, குழந்தையானந்த ஸ்வாமிகள்போன்ற பல்வேறு மஹான்களையும், 468 சித்த புருஷர்களையும், பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதரஸ்வாமிகள் பிரதிஷ்டை செய்து பிரதி வருடம் அவர்களுடைய ஜெயந்தி விழாவும், ஆராதனை விழாவும் சிறப்பாக நடத்திவருகிறார். அந்த வகையில் இன்று 20.02.2019 புதன்க்கிழமை இந்தியாவின் தலை சிறந்த ஆன்மீகவாதிகளில் ஒருவரும்,வீரத்துறவி விவேகானந்தரின் குருவும் காளி உபாசகரும், ஸ்ரீ சாரதாதேவியின் அருள் பெற்றவரும், இந்திய நாட்டினர் மற்றும்இந்து மதத்தினர் என்று இல்லாமல் மனிதயினம் முழுமைக்கும் ஒரு ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்த திரு ராமகிருஷ்ணபரமஹம்சரின் 183வது ஜெயந்தியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்சருக்கு காலை 10.00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு ஹோம பூஜை பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025