

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் ஏகாதசி திதியை முன்னிட்டு வருகிற 15.02.2019 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை பிணி தீர்க்கும் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு சகல விதமான பிணி தீர்க்கும் அமிர்த சஞ்சீவினி யாகத்திகழும் நெல்லிக்காய் பொடியை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற உள்ளது.
நெல்லிப்பொடியின் மருத்துவ பயன் : நெல்லிக்காய் பொடி உடல் உஷ்ணத்தை குறைத்து, மூளைக்கு குளிர்ச்சியையும், ஞாபகச் சக்தியையும் அளித்து, உடலுக்கும் குளிர்ச்சியைத் தருபவையாகும். கோடை காலங்களில் நமக்குப் பொதுவாகவே ஏற்படக்கூடிய தாகம், நா வறட்சி, மயக்கம், வாந்தி மற்றும் அஜீரணம் ஆகியவற்றிற்கு நெல்லிக்காய் அருமருந்தாகும். தவிர ஆயுள் விருத்திக்கும் சஞ்சீவி போன்றதாகும். தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாகும். நீரிழிவை நீக்கும் இயல்பு உண்டு. மேலும் நெல்லியில் உடலுக்கு அவசியமான பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் முதலியவை அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு வலிமை கிடைக்கின்றது. இரத்த விருத்தியையும் கொடுக்க கூடியவை.
சிறுநீரகக் கோளாறு, இரத்தச் சோகை, மஞ்சள் காமாலை மற்றும் அஜீரண நோய்களுக்கு நல்ல மருந்தாகிறது. சர்க்கரை நோயாளியின் கணையத்தை வலுவேற்ற உதவும். மூப்பினை ஏற்படுத்தும் தொல்லைகளைப் போக்கி, உடல் உறுப்புகளை நல்ல நிலையில் வைக்கும் திறன் படைத்தது.வாழ்நாளை நீடிக்கச் செய்யும் காயகல்ப மூலிகையாகும்.
நெல்லிக்காயில் புரதம், கொழுப்பு, கரிச்சத்து, சுண்ணாம்புச் சத்து, தாதுப்பொருள், இரும்பு, நிக்கோடினிக் அமிலம் முதலியவை அடங்கியுள்ளன. இரத்தத்தில் கொலஸ்டிரால் படிதலை வைட்டமின் ‘சி’ தடுக்கிறது. இரத்தத்தில் சேரும் யூரிக் அமிலத்தை நெல்லிக்காய் விலக்குகிறது. பொதுவில் வாதமும் சமப்பட்டு விடுகிறது.மனித உடல் முழுவதும் பரவி, ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் நெல்லிக்காய் தருகிறது. இது இதயத்திற்கு வலிமையை வழங்குகிறது. மற்றும் குடற்புண், இரத்தப்பெருக்கு, நீரிழிவு, கண் நோய் ஆகியவற்றைக் குணமாக்கும்.
தன்வந்திரி மந்திரம்:
ஓம் நமோ பகவதே வாஸூதேவாய தந்வந்த்ரயே
அம்ருத கலசஹஸ்தாய ஸர்வ ஆமய விநாசநாய
த்ரைலோக்ய நாதாய ஸ்ரீ மஹாவிஷ்ணவே நம:
ஸ்ரீ தன்வந்திரி பெருமாளின் மகிமை : ஒரு மனிதன் தேகம் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால் தான், மற்ற எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, வழிபடுவது மிகவும் நல்ல பலன் தரும். பிறப்பும், இறப்பும் பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இயற்கையின் நீதியாகும். அதிலும் மனிதர்கள் பிறந்தது முதல் வாழ்வில் பலவிதமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஒருவர் இவ்வுலகில் சிறப்பாக வாழ செல்வம் எவ்வளவோ முக்கியமோ அதே அளவிற்கு நோய்களின் பாதிப்பிற்குள்ளாகாத திடமான ஆரோக்கியமும், உடல்நிலையும் அவசியமாகும். இந்து மதத்தில் நோய்களை நீக்கும் தெய்வமாக “தன்வந்திரி பகவான்” கருதப்படுகிறார். இவர் தேவர்கள் மற்றும் அசுரர்கள் சாகாநிலை தரும் அமிர்தத்தை பெற பாற்கடலை கடைந்தவர். மனிதர்கள், தேவர்கள் பயன்பெற அமிர்த கலசம் மற்றும் நோய்களை போக்கும் பல மருத்துவ மூலிகைகளுடன் தோன்றினார். நோய்களை போக்கி, உடல்நலத்தை காக்கும் மூலிகைகளை உலகத்தாரின் பயன்பாட்டிற்கு வெளிக்கொணர்ந்ததால் தன்வந்திரி பகவான் மருத்துவ கடவுளாக வணங்கப்படுகிறார்.
வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி பீடம் : வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுர, கீழ்புதுப்பேட்டையில் மேற்கண்ட சிறப்புகள் வாய்ந்த மருத்துவ கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு 46 லக்ஷம் பக்தர்கள் கைப்படை எழுதிய 54 கோடி தன்வந்திரி மந்திரங்களை கொண்டு 9 அடி உயரத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பாக பிரதிஷ்டை செய்துள்ள தன்வந்திரி பகவானுக்கு வருகிற 15.02.2019 வெள்ளிக்கிழமை ஏகாதசி திதியை முன்னிட்டு சகல விதமான பிணி தீர்க்கும் அமிர்த சஞ்சீவினி யாகத்திகழும் நெல்லிக்காய் பொடியை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் சிறப்பு வைபவத்தில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுகிறோம்.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள் நெல்லிக்காய் பொடி, மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், வாசனாதி திரவியங்கள், பசுநெய், வெல்லம், சுக்கு, மிளகு, திப்பிலி, நல்லெண்ணை, பழங்கள், புஷ்பங்கள், வஸ்திரங்கள், நிவேதன பொருட்கள், கொடுத்து பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று தன்வந்திரி பகவான் அருளுடன் நீண்ட ஆயுள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025