Sani Santhi Homam June 2019

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் இன்று01.06.2019 சனிக்கிழமை காலை10.30 மணி முதல் 12.00 மணி வரை சனி கிரகத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகல சனி சாந்தி ஹோமமும், பீடத்தில் உள்ள அஷ்ட பைரவர் சகித மஹா காலபைரவருக்கும் காலசக்கிரத்திற்கும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

வாழ்வில் முன்னேற்றமடைய பலவிதமான முயற்சிகளை நாம் மேற்கொண்டாலும் பலவிதமான தடைகள் வந்து அந்த வகையான முயற்சியை தடுக்கிறது. அந்த தடைகளை வரிசைப்படுத்தி பார்க்கும் பொழுது திருமணத்தடை, உத்யோகத்தடை, ஆரோக்யத்தடை, பித்ரு தடை, கிரகத்தடை, வாஸ்துத்தடை, நவகிரகத்தடை, கர்மவினை, ஊழ்வினை தடை, போன்ற பல்வேறு விதமான தடைகளுக்கு நிவாரணம் தேடும் வகையில் சனிசாந்தி ஹோமமும் சனி ப்ரீத்தி பூஜையும் நடைபெற்றது.

இதில் கருப்பு நிற வஸ்த்திரம், நீலநிற வஸ்த்திரம், பச்சரிசி, நெல், எள், நெல்பொறி, நல்லண்ணைய், வெல்லம், வன்னி சமித்து, நாயுருவி, கறுப்பு திரட்சை போன்ற பல பொருட்கள் யாகத்தில் சேர்க்கப்பட்டது. ஹோமத்தின் நிறைவாக காலசக்கர பூஜையும், காலபைரவருக்கு சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. நாளை 02.06.2019 ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு புஷ்பயாகமும் அன்னப்பாவாடை உற்சவமும் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images