

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் அருளானைப்படி உலக நலன் கருதியும், சகல கார்ய சித்தி பெறவும், வருகிற 07.11.2018 புதன்கிழமை காலை 11.00 மணியளவில், அமாவாசையை முன்னிட்டு ராகு-கேது ஹோமத்துடன் மஹாகாளி யாகம் நடைபெற உள்ளது.
மஹா காளி யாகம் :
தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார். அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்த அன்னையானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள். இத்தேவியின் அருள் பெற அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் பயன்பெற தன்வந்திரி பீடத்தில் ராகு-கேது ஹோமத்துடன் மஹாகாளி யாகம் நடைபெற உள்ளது.
தேவர்கள், சித்தர்கள், ஞானிகள், யோகிகள் தொடங்கி நாடாளும் அரசர்கள் முதல் சரித்திர காலம் தொட்டு இன்றுவரை தங்கள் இஷ்ட காரியங்களை யாகத்தின் மூலமே பூர்த்தி செய்து கொண்டனர். மேற்கண்ட மஹா யாகங்கள் சகல கார்ய சித்தி பெறவும், தடைகள் நிவர்த்தி பெறவும், சர்பதோஷங்கள் விலகவும், ஸ்ரீ அஷ்ட லசஷ்மி கடாசஷம் பெறவும், தீர்க்க சுமங்கலி பிராப்தி பெறவும், யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி நடைபெறுகிறது. நடைபெறுகிறது.
ராகு – கேது ப்ரீத்தி ஹோமம் :
சர்ப தோஷங்கள், நாக தோஷங்கள் விலகவும், உத்யோகம், தொழில், வியாபாரம், திருமண வாழ்க்கை, குழந்தை பாக்யம் போன்றவற்றில் உள்ள தடைகள் அகலவும், சினிமா துறையில் புகழ் பெறவும், கேமராமேன் போன்ற டெக்னிக்கல் துறைகளில் முன்னேறவும், பல கலைகளில் வித்தகராகவும், கலைத்துறை, நிழற்படம், எடிட்டிங், அனிமேஷன் போன்ற துறைகளில் சிறந்து விளங்கவும், இசை துறையில் பெயரும் புகழும் கிடைக்கவும், அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் மாபெரும் ராகு – கேது பிரீதி ஹோமம் நடைபெறுகிறது.
இந்த மஹா யாகங்களில் பங்கேற்பதின் மூலம் சாபங்கள், தடைகள் ஆகியவை நீங்கி செல்வம் சுகாதாரம் இன்பம் ஆகியவை கிடைக்கும். மேலும் நினைத்த காரியம் ஜெயமாகும். இதில் பட்டுப்புடவை, பட்டுத் துண்டு, குங்குமச்சிமிழ், சீப்பு, மஞ்சள், புஷ்பம், எலுமிச்சம்பழம், வெற்றிலை பாக்கு, நெத்துக் காய், கிராம்பு, வால் மிளகு, லவங்கம் போன்ற திரவியங்கள் யாகத்தில் சேர்க்கப்பட உள்ளது. ஹோமத்தில் நாம் இடும் மூலிகை பொருட்கள் தெய்வத்திற்கு உணவாகின்றன. இந்த ஹோமத்தில் இடும் மூலிகைக்கு சக்திகள் உள்ளன. உதாரணமாக புல்லுருவி சர்வ வசியத்தையும், தேள் கொடுக்கு இராஜ வசியத்தையும், செந்நாயுருவி ஆண் வசியத்தையும், நில ஊமத்தை பெண் வசியத்தையும், வெள்ளெருக்கு சத்ரு வசியத்தையும், சீந்தில்கொடி தேவ வசியத்திற்கும் இன்னும் பலப்பல மூலிகைகள் பல கார்யங்கள் வெற்றி பெற யாகத்தில் சேர்க்கப்பட உள்ளது. ஹோமத்தீயில் தெய்வங்களை வசியம் செய்து, பால், பழம், தேன், மூலிகை சமித்துகளை ஹோமத்தில் தெய்வத்திற்கு உணவாக கொடுத்து, உரிய மந்திரம் ஜபித்து நம் குறைகளை தேவைகளை தெய்வத்திடம் கூறும் போது தெய்வங்கள் அதனை ஏற்று நமக்கு மகிழ்வுடன் பலனை தருகின்றன என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025