Puspa Yagam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி வருகிற 23.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு சிறப்பு தன்வந்திரி ஹோமத்துடன் மாபெரும் புஷ்பயாகம் நடைபெற உள்ளது.

புஷ்பங்களின் மஹிமை :

பகவானை ஆராதித்து மகிழ்ச்சி அடைவதில் பல்வேறு வழிகள் உள்ளது. அதில் மிகவும் உசிதமானது புஷ்பங்களால் அராதிப்பது என்பது அனைவரும் மகிழ்ச்சியுடன் முன்னொருவர். அதன்மூலம் மன அமைதியும், மகிழ்ச்சியும், ஏற்பட்டு பல்வேறு வகையான நன்மைகளை பெறுவர். நமது வழிபாட்டில், பூஜையில் பிற பொருட்களை விட பூக்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. இறைவனுக்கு மிகவும் பிடித்தது தன்னை மலர்களால் அர்ச்சனை செய்வதும், ஆராதிப்பதும் ஆகும். இவ்வைபவத்தை பக்தர்கள் புஷ்பாஞ்சலி என்றும், புஷ்பார்ச்சனை என்றும், புஷ்ப வழிபாடு என்றும் பல்வேறு பெயர்களில் அழைத்து மகிழ்கின்றனர். இவற்றை பெரிய அளவில் பல்வேறு வகையான புஷ்பங்களை கொண்டு வழிபாடு செய்வதே புஷ்ப யாகம் ஆகும். இதனால் உடல் நலமும், மன நலமும் பெறலாம்.

சங்கு புஷ்பம், செந்தாமரை, வெண்தாமரை, அரளி, பூவரசம்பூ, வில்வம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ்த்தாமரை.கொன்றை, மகிழம், மல்லிகை, முல்லை, சம்பங்கி, மருது, மருதாணி, தவனம், ரோஜா, கருந்துளசி, துளசி, மனோரஞ்சிதம், பவழமல்லி, மரிக்கொழுந்து, செவ்வந்தி, மஞ்சள் அரளி, தங்கஅரளி செம்பருத்தி, அடுக்கு அரளி, தாழம்பூ, போன்ற 60 க்கும் மேற்பட்ட மலர்களால் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு புஷ்பயாகம் நடைபெற உள்ளது.

புஷ்ப அர்ச்சனையால் ஏற்படும் நன்மை :

தனலாபம், தொழில் முன்னேற்றம் கூடும்.நீண்ட ஆயுள், இல்லறத்தில் ஒற்றுமை நிலவும். மன சஞ்சலம் நீக்கும். புத்திக்கூர்மை, கலைகளில் மேம்பாடு போன்ற வற்றைத் தரும்.சுகபோகம், உறவினர் நெருக்கம், வித்தைகளில் தேர்ச்சி கிட்டும்.கடன் தீரல், திருமண பாக்கியம் போன்றவை கிடைக்கும்.ஞானம், புகழ், தொழில் விருத்தி உண்டாகும் வறுமை, அவச்சொல், அபாண்டங்கள் நீங்கி ஆயுள், ஆரோக்கியம் கூடும். தெய்வ அருள் கிடைக்கும். சங்கடங்களை நீக்கி சகல காரிய சித்தி தரும்.

மனநோய் போக்கும். தீராத குடும்பப் பகை தீர்ந்து விடும்; வியாபார போட்டியால் ஏற்படும் பகை உள்பட அனைத்துவிதமான பகைகளும் தீர்ந்துவிடும். பெண்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு. செய்த பாவங்கள் விலகும். தீராத நோய்களும் தீரும். நீண்ட காலமாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிற மனக் கஷ்டமும் விலகிவிடும். கடும் நோய்கள் காணாமல் போய்விடும். மனம், உறக்கமின்மை, நரம்புத் தளர்ச்சிக்கு நிவாரணம் கிடைக்கும். ரத்தக்குழாய் அடைப்புக்கு தீர்வு கிடைக்கும். கட்டிகளுக்கும், கண்நோய்களுக்கும் நிவாரணம் கிடைக்கும். யானைக்கால் வியாதிக்கும் இருமல், கல்லீரல், மண்ணீரல் மற்றும் மூட்டு வலி போன்ற நோய்களை குணப்படுத்தவும் புஷ்பாஞ்சலி, புஷ்பயாகம், புஷ்ப அர்ச்சனை என்று போற்றப்படும் புஷ்பயாகம் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு நடைபெறும் வைபவத்தில் கலந்துகொண்டு மனநோய், உடல் நோய் நீங்கி ஆத்ம சுத்தி ஏற்பட்டு ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெறலாம் என்கிறார் "யக்ஞஸ்ரீ" முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images