

பொதுவாக, தமிழ்நாட்டில் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயப்படி, தஷிணாயன புண்ய காலத்தில் ஆடி முதல் மார்கழி வரையில் புரட்டாசி மாத சனிக் கிழமைகளில் விசேஷமாக ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு எல்லா வைஷ்ணவ ஆலயங்களிலும் பிரம்மோத்ஸமும், ஆராதனைகளும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த மாதங்கள் தேவர்களின் இரவு நேரமாக கருதப் படுவதால், ஸ்ரீமன் நாராயணனை தரிசிக்க திருப்பதிக்கு சென்று வருவார்கள்.
இந்த தஷிணாயன புண்ய காலமான சாதுர் மாதத்தில் எல்லா விதமான தெய்வங்களும் ஒன்று சேர வருவதாகவும், நம்முடைய பித்ருக்களும் உடன் வருவதாக சொல்லப்படுகிறது. அங்கு செல்ல இயலாதவர்கள் தங்கள் இல்லங்களில் ஆசாரமாக மாவிளக்கு ஏற்றி, விரதங்கள் அனுஷ்டித்து, மந்திரங்களையும், தெய்வ நாமங்களையும் சொல்லி தங்கள் குடும்ப ஒற்றுமைக்காகவும், உறவினர் வருகைக்காகவும், எல்லா செல்வங்களும் கிடைத்து, நோயற்று வாழவும் தங்கள் இல்லத்திலிருந்தே ஸ்ரீமன் நாராயணனை பிரார்த்தித்து அனுக்கிரஹம் பெறுவார்கள்.
வாலாஜா பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் கடந்த 17.08.2016 அன்று பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ கல்யாண ஸ்ரீனிவாச பெருமாளுக்கு தற்போது மண்டல பூஜை நடந்து வருகிறது. பீடத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமை மாலையில் தாயார் சமேத தன்வந்திரி பெருமாளுக்கு ஊஞ்சல் சேவையும், சனிக் கிழமை தோறும் பீடத்தின் உள்ளே பவனி வரும் தேர் வைபவமும் நடை பெற்று வருகிறது. இவைகளை மனதில் கொண்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பீடத்தில் தினமும் காலை, மாலை நடைபெறும் ஆரத்தியும் லோக ஷேம கூட்டு பிரார்தனையும் உலகில் உள்ள எல்லா மக்களும் மற்றும் அனைத்து ஜீவ ராசிகளும் நோயின்றி வாழவும், நீர் நிலைகள் நிரம்பி விவசாயம் தழைக்கவும், மக்கள் செல்வம் பெருகி சந்தோஷமாக வாழவும், இந்த புரட்டாசி மாதத்தில் 17.09.2016 முதல் சனிக் கிழமை தோறும் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு காலை விசேஷ திருமஞ்சனமும், சகஸ்ர நாம அர்ச்சனையும் நடைபெறும் என ஸ்வாமிகள் தெரிவிக்கிறார்.
இதில் பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு எல்லாவித தெய்வங்களின் அருளையும், மூதாதையர்களின் பரிபூர்ண அனுக்கிரஹத்தையும் மற்றும் ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் ஆசிர்வாதத்தையும் பெற விழைகிறோம்.
மேலும் விவரங்களுக்கு:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
வாலாஜாபேட்டை.632513
e-mail : danvantripeedam@gmail.com , web:www.danvantritemple.org, www.danvantripeedam.blogspot.in
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025