

(ஆண், பெண், சுபமான மறு திருமணத்திற்கு ஒரு சிறப்பு ஹோமம்) நாள்; 26.06.2017 திங்கட் கிழமை காலை 10.00 மணியளவில்
கலியுகத்தில் இன்றைக்குப் பல குடும்பங்களில் இருக்கிற பிரச்சனையே ஒற்றுமையான தாம்பத்தியம் இல்லாததும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாததும் தான் திருமணமான ஒரு சில மாதங்களிலேயே விவாகரத்து விவகாரம், கோர்ட்,வரை போய் விடுகிறது. ஒரு சிலருக்கு வழக்குகளை சந்திப்பதுக்குள் வயதாகிவிடுகிறது.
இது எதனால் ஏற்படுகிறது, ஏன் ஏற்படுகிறது, எதனால் இந்த கஷ்டம் பெற்றோர்கள் சொல்லும் ஒரு வார்த்தை என் மகன்/என்மகள் ஜாதகத்தில் எந்த தோஷமும் இல்லை என்று இரண்டு மூன்று ஜோதிடர்களிடம் ஆலோசனைப் பெற்றதில் நல்ல அருமையான பொருத்தம் என்றுதானே சொன்னார்கள். குலதெய்வம், இஷ்ட தெய்வம் பெரியோர்களின் ஆசியுடன் தான் எங்கள் குழந்தைக்கு திருமணம் செய்து வைத்தோம். 4,5,7,8, என்ற தேதிகளில் திருமணம் செய்யக்கூடாது என்று ஒருசிலர் கூறியதின் பேரில் அந்த தேதிகள் இல்லாமல் தான் திருமணம் செய்து வைத்தோம். ஒரு சிலர் பையன் நல்ல பையன் மாதிரி தெரிகிறான். ஒரு சிலர் பெண் மகாலட்சுமி போல் உள்ளாள். இருவருக்கும் நல்ல பொருத்தம் என்றெல்லாம் கூறி ஆசீர்வதித்து சென்றார்களே, ஆனால் அவை அனைத்தும் கேள்விக் குறியாகி விட்டதே. இது ஏன் என்று என்னிடம் நேரில் வந்து அவர்கள் சொல்லும் பொழுது மிகவும் வேதனை அடைந்தேன்.
போன தலைமுறையில் கணவனுக்கும் மனைவிக்கும் ஒரு கருத்து வேறுபாடு சிறிய மனஸ்தாபம் என்றால் அது திருமணமாகி இருபது முப்பது வருடங்களுக்குப் பின் லேசாக எட்டிப் பார்க்கும். ஆனால் இன்றைய தலைமுறையில் கேட்கவே வேண்டாம், பிரசவத்திற்காக டாக்டர் மனைவியை அவர் வீட்டில் கொண்டு விட்டார். ஒரு இன்ஜினியர் மாப்பிள்ளை ஆனால் குழந்தை பிறந்த பின் மனைவியை அழைத்துப் போக வரவே இல்லை, காரணம் என்ன என்று இன்றுவரை மனைவி குடும்பத்துக்குப் புரியவில்லை. தன் தாய் வீட்டிற்கு சென்ற மனைவி தன்வீட்டிற்கு வரவில்லை, ஏன் என்ற காரணம் புரியவில்லை, என்று கூறும் கணவரும் இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம் என்ன என்று பார்க்கும் பொழுது தாம்பத்தியத்தில் திருப்தி இல்லாமை, முளைவிடும் சந்தேக புத்தி,கற்பில் நேர்மையின்மை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமை, தேவையற்ற காம இச்சைகள், தீய நண்பர்கள், தீய பழக்கவழக்கங்கள், பெற்றோர்களின் பேச்சிற்கு மதிப்பு கொடுக்காமை,ஒருசில பெற்றோர்களின் சுயநலம், இப்படி பல அம்சங்கள், விவாகரத்துக்கு காரணம் ஆகின்றன. சில நேரங்களில் மறுவிவாகம் என்று ஆகி அதுவும் விவாகரத்து ஆகி விடுவது உச்சகட்ட சோகம், இப்படி இரண்டாவது திருமணமும் விவாகரத்தாகி மூன்றாவது திருமணத்திற்க்கு வரன் தேடும் குழப்பங்களைப் பார்த்தால் பாவமாகத் தான் இருக்கிறது.
போதிய பக்குவமும் சரியான வழிகாட்டுதல், உணவு பழக்க வழக்கமும் ஆன்மீக பலமும் இல்லாமல் தவிப்பவர்கள் மறுமணம் கேள்விக்குறி ஆகிறது. மறுமணம் என்பது பெண்களின் பாதுகாப்பு கருதியும் குழந்தைகளின் எதிர்காலத்தை முன்னிட்டும் சிலரைப் பொறுத்தவரை காலத்தின் கட்டாயம் ஆகிறது. என்றாலும் அதாவது நல்லவிதமாக நடந்து அந்தத் திருமண வாழ்க்கை ருசிக்கிற வகையில் அமைய வேண்டும்.
எனவே வில்லங்கம் இல்லாத, சிக்கல், இல்லாத, மனநிம்மதி தருகின்ற மறுமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண், பெண்களுக்கு பெற்றோர்களின் பூரண ஒத்துழைப்புடன் ஸ்ரீ தன்வந்திரி மற்றும் ஆரோக்ய லஷ்மியினுடைய பரிபூரண அருளுடன் உடல் நோய் மனநோய் நீங்கி ஆரோக்யமான மண வாழ்க்கை அமைய ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 26.06.2017 திங்கட் கிழமை காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை அரசு விடுமுறை தினத்தை முன்னிட்டு வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் சிறப்பு ஹோமம் நடைபெற இருக்கிறது.
வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் மறுமணம் தேவைப்படும் ஆண்களும், பெண்களும், இந்த ஹோமத்தில் பக்தி உணர்வுடன் கலந்து கொண்டு பலன் பெற்று வாழ்க்கையில் பிறரைப் போல் தலை நிமிர்ந்து வாழ பிரார்த்தனை செய்யும் விதத்தில் மனித நேயத்துடன் நடைபெறும் இந்த மஹா ஹோமத்தில் 23.06.2017க்குள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மேலும் விபரங்களுக்கு,
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025