Pournami Special Yagam FEB 2019

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி பௌர்ணமியை முன்னிட்டு வருகிற 19.02.2019 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலாபார்வதி யாகம், தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம் என மூன்று யாகங்கள் நடைபெறுகிறது.

திருமண நடைபெறவும், குழந்தை பாக்யம் பெறவும், குடும்பக்ஷேமம் பெறவும், உத்யோகத்தில் நன்மைகள் பெறவும் ஸ்ரீ குருபகவானுடைய அருள் மிகவும் முக்கியம்.

குருபகவான் பரிபூரண சுபர் ஆவார். ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் நல்ல ஸ்தானத்தில் அமர்ந்து எந்த கிரகங்களையெல்லாம் பார்க்கிறாரோ அந்த கிரகங்களும் தங்கள் அசுபத் தன்மையை விடுத்து நற்பலன்களை தரத் துவங்கிவிடும். அதாவது, வளர்ச்சியைத் தடுப்பார். சுப காரியங்கள் ஈடேறுவதில் முட்டுக்கட்டை போடுவார். விரக்தியின் விளிம்பில் கொண்டுபோய் நம்மை நிறுத்துவார், ஆரோக்கியத்தைக் குறைப்பார்.

கல்வியில், ஆரோக்கியத்தில், வசதி வாய்ப்புகளில், வேலை வாய்ப்பில், சொந்த வீடு வாங்குவதில், சொகுசு வாகனங்கள் வாங்குவதில், ஆன்மிக ஈடுபாட்டில், புனிதப் பயணம், சுற்றுலாப் பயணம் மற்றும் அயல்நாட்டு பயணங்கள் மனதிற்கு பிடித்த வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பார். குழந்தைச் செல்வமும் சகல செல்வங்களும் தந்து அருளுவார்.

திருமண வரத்தையும் புத்திர பாக்கியத்தையும் அருளுகிறவர் குருபகவான். அவர் கருணையின்றி கல்யாணமும் நிகழாது. பிள்ளை வரமும் கிடைக்காது.

வாழ்வில் வளமாக வாழவும் குறைவற்ற செல்வத்தோடு வாழவும்தான் தொழிலில் மேன்மை, வியாபாரத்தில் வெற்றி, பதவியில் உயர்வு என்று பல்வேறு நன்மைகளை தரக்கூடியவர் குருபகவான்.

இதுவே குருவின் அடையாளமான அனைத்திலும் நேர்மை, உண்மை, பக்தி, தியாகம், கருணை போன்றவையாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த குருவின் அருள் பெற்று ஆண், பெண் திருமணத்தடை நீங்கவும், புத்திர தோஷம் அகலவும், குடும்பத்தில் ஆண், பெண்ணுக்கு ஏற்ற கணவன் மணைவி அமையவும், ஜாதக ரீதியாக உள்ள தோஷங்கள் நீங்கவும், மகேஸ்வரனையும், ஸ்ரீ கிருஷ்ணரையும் வேண்டி கல்யாண வரத்திற்கும் பிள்ளை வரத்திற்கும் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் மேற்கண்ட யாகங்கள் நடைபெற உள்ளன. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images