

வாஸ்து தோஷங்கள் அகலவும், பூமி, மனை, வீடு, போன்றவைகளில் ஏற்படும் தடைகள் விலகவும், ரியல் எஸ்டேட் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கவும், நவக்கிரகங்களில் முக்கிய கிரகமான ராகு கிரகத்தினாலும், ராகு திசை ராகு புத்தி நடப்பவர்களுக்கு ஏற்படும் பல்வேறு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறவும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஜூன் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7.30மணி முதல் 9.00 மணிக்குள்ளாக கடக லக்னத்தில் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் ஆலய மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இத்திருப்பணிகள் தங்கு தடையின்றி சிறப்பாக நடைபெறவும், இத்திருப்பணிக்கு தேவையான திரவியங்கள் கிடைக்கவும், அதிக பக்தர்கள் பக்வத் கைங்கர்யத்தில் பங்கேற்று பலன் பெறவும் வருகிற 30.04.2019 செவ்வாய்கிழமை ஏகாதசி திதியில் காலை 10.00 மணிக்கு ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் ஹோமமும், ரத்த சம்பந்தமான நோய்கள் அகலவும், சகலவிதமான உடற்பிணி, உள்ளப்பிணி நீங்கவும் ஸ்ரீ தன்வந்திரி மூலவருக்கு நெல்லிப்பொடி அபிஷேகமும் நடைபெற உள்ளது.
புராணங்களில் மனை, நிலம், வீடு போன்ற அனைத்து ரியல் எஸ்டேட் சார்ந்த அல்லது கட்டிடத் தொழில் சார்ந்த எல்லா விஷயத்திற்கும், குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பூமி சார்ந்த அனைத்து விஷயத்திற்கும் வராகமூர்த்தியை சரணடைவதே ஆகச் சிறந்த பரிகாரமாக அமையும். மேலும் ராகு சார்ந்த பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வராஹ மூர்த்தியை வணங்கி வழிபடுவதே ஆகும். ராகு சார்ந்த பிரச்சனைகளுக்கு ஜாதகத்தில் ராகு 2 4 5 7 8 இடங்களில் இருப்போருக்கு பரிகாரமாகவும் தன்வந்திரி பீடத்தில் வருகிற செவ்வாய்கிழமை 30.04.2019 வராகஹ ஹோமமும் அதனை தொடர்ந்து 9 விதமான மலர்களை கொண்டு புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது. இவ்வைபவத்தில் வீடு, மனை சம்பந்தமாக ரியல் எஸ்டேட் செய்பவர்கள், வியாபார பெருமக்கள், தொழிலதிபர்கள், மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த ஹோமத்தை தொடர்ந்து யாகத்தில் வைத்த யந்திரங்களை பெற்று பூஜை அறையில் வைத்து வழிபடுவது சிறப்பாகும். அல்லது பூமியில் புதைத்து வைப்பது, மனை சார்ந்த வழக்குகள், வாஸ்து கோளாறுகள், கட்டிடம் வாங்க முடியாமல் இருப்பது, கட்டிடம் விற்க முடியாமல் இருப்பது, மனை வாங்க முடியாமல் தவிப்பது, வீடு பேறு இல்லாமல் இருப்பது, ரியல் எஸ்டேட் தொழிலில் நலிவடைந்து இருப்பது போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம். ராஹுவினால் சொல்ல முடியாத துன்பங்களை சந்தித்து வருவோருக்காக ராகு ரக்ஷையும், ஹோம தீர்த்தமும், அபிஷேக தீர்த்தமும், பங்கேற்கும் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இத்தீர்த்தத்தை பெற்று அவரவர் இல்லங்களிலும், வியாபார ஸ்தலங்களிலும் தெளித்து ராகு தோஷங்கள் நீங்கி முருக பெருமான் அருளுடம், ஸ்ரீ லக்ஷ்மி வராஹரின் அனுக்கிரகம் பெற்று தொழில் அபிவிருத்தியுடன் ஆனந்தமாக வாழ எல்லாம்வல்ல தன்வந்திரி பகவானையும், இதர75 பரிவார மூர்த்திகளையும், 468 சித்தர்களையும் பிரார்த்திக்கின்றோம்.
செவ்வாய்கிழமை தினத்தில் செய்யப்படும் இந்த ஹோமம் முருக பெருமான் அருளால் மிக அதிக பலனை ஹோமத்தில் கலந்துகொண்டு வழிபடுவோருக்கு கிடைக்கும் என்கிறார் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025