Pavithrotsavam Started

வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் ஆட்சிபுரிகின்ற ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கும்,இதர பரிவார மூர்த்திகளுக்கும்  “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின்அருளானைப்படி இன்று 12.11.2018 திங்கள்கிழமை காலை கோ பூஜை, யாகசாலை பூஜை, ஸ்ரீ சுதர்சன் மஹா ஹோமம் நடைபெற்று மாலை 5.00 மணியளவில் வாஸ்து சாந்தி ஹோமம், உற்சவர் தன்வந்திரி பவித்ர மண்டபம் எழுந்தருளி, சங்கல்பம், தீக்ஷாதாரணம், அங்குரார்ப்பணம், மஹா சங்கல்பத்துடன் பவித்ரோத்ஸவம் துவங்கியது. இதில் ஆகம ரத்ன சோளிங்கர் ஸ்ரீராம் பட்டாச்சாரி, சேங்காளிபுரம் வெங்கடேச பட்டாச்சாரி, சோளிங்கர் மோகன் பட்டாச்சாரி, செங்கம் அரவிந்த் பட்டாச்சாரி, போளூர் விகனச பட்டாச்சாரி, உப்பிளியப்பன் கோயில் அனந்த் பட்டாச்சாரி, வடகுடி மோகன் பட்டாச்சாரி, இவர்களுடன் பாராஞ்சி சந்தான கிருஷ்ண பட்டாச்சாரி பங்கேற்று செய்து வருகின்றனர். தொடர்ந்து நாளை 13.11.2018செவ்வாய்கிழமை வேதபாராயணம், சகல தேவதா திருமஞ்சனம், ஸ்ரீ தன்வந்திரி பெருமாள், ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி விசேஷ அலங்காரம், அர்ச்சனை, மஹா ஆர்த்தி, ஸ்ரீ தன்வந்திரி உத்ஸவமூர்த்தி திருமஞ்சனம், பவித்ர ஹோமம், சஹஸ்ர நாம அர்ச்சனை, மண்டப அலங்காரம், சகல தேவதா பூஜை, மஹா சாந்தி ஹோமங்கள் நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images