Navakannigal, Sapthamadhagal Homam and Aradhanai

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், கொரோணா வைரஸின் அச்சம் குறையவும், சூரிய கிரகணத்தின் தாக்கம் குறையவும், உடல் மற்றும் மன ரீதியான நோய்கள் அகலவும், சகல சௌபாக்யங்கள் பெற ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டி வருகிற 24.06.2020 புதன்கிழமை முதல் 01.10.2020 வியாழக்கிழமை வரை ஸ்ரீ தன்வந்திரி கோடி நாம ஜப யாக்ஞம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், மஹா மிருத்யுஞ்சய ஹோமம், ராகு கேது ப்ரீதி ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு இந்த 100 நாள் யாகங்கள் தங்குதடையின்றி சிறப்பாக நடைபெறவும் குலதெய்வங்கள், கிராம தேவதைகள் மற்றும் எல்லை தெய்வங்கள் ஆசிர்வாதங்களை பெற பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள நவகன்னிகள், சப்தமாதக்கள், அனுசூயா தேவி மற்றும் அத்ரி பாதத்திற்கு பொங்கல் வைத்து சிறப்பு ஆராதனைகளும், ஹோமமும் இன்று 19.06.2020 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

மேலும் நாளை 20.06.2020 சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் 27 நக்ஷத்திரக்காரர்கள் மற்றும் 12 ராசிக்காரர்கள் நலன் பெறவும், நவக்கிரகங்களின் ஆசிர்வாதங்கள் பெறவும், சூரிய பகவானின் அனுக்கிரகம் கிடைக்கவும் நவக்கிரக ஹோமம் மற்றும் காலசக்கிர பூஜையும் சனிக்கிரகதோஷங்கள் அகல பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள பாதாள சொர்ண சனீஸ்வரர், ஜெய மங்கள சனீஸ்வரரை வேண்டி சனி சாந்தி ஹோமமும் விசேஷ ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

இதனை தொடர்ந்து மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை ராகு கேது தோஷங்கள் அகலவும், ஏவல், பில்லி, சூன்னியங்கள் அகலவும், உயர்பதவிகள் கிடைக்கவும், சத்ரு தோஷங்கள் அகலவும் பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி மற்றும் ஸ்ரீ மஹிஷாசுர மர்த்தினியை வேண்டி திருஷ்டி துர்கா யாகமும் ஆராதனைகளும் மிளகாய் வற்றல் கொண்டு நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழ்கண்ட மின்னஞ்சல் மூலமாகவோ தொலைபேசி மூலமாகவே சங்கல்பத்தை தெரிவித்து குடும்பத்தினருடன் அவரவர் இல்லங்களில் இருந்து பிரார்த்தனை செய்யலாம். நேரடியாக பங்கேற்க யாரூக்கும் அனுமதியில்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

                                             ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,

                                            அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,

                                            வாலாஜாபேட்டை – 632513.

                                            Ph : 04172 230033 / 9443330203

                                            Email : danvantripeedam@gmail.com

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images