Maha Puspa Yagam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி இன்று 23.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 1.00 மணி வரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு ஆருத்ரா தினத்தில் 60 வகையான மலர்களுடன் 2 ஆயிரம் கிலோ புஷ்பங்கள் கொண்டு ஆரோக்ய ஹோமத்துடன் மாபெரும் புஷ்பயாகம் நடைபெற்றது. மேற்கண்ட யாகத்தில் பிரபல திரைப்பட நடிகை “கலைமாமணி” திருமதி. தேவயானி ராஜகுமாரன், பிரபல திரைப்பட இயக்குனர் திரு. ராஜகுமாரன், பிரபல சின்னத்திரை இயக்குனர் “கோலங்கள் புகழ்” திரு. V.திருச்செல்வம் குடும்பத்தினர், திரைப்பட நடிகர் “கலைமாமணி” டாக்டர். பூவிலங்கு மோகன் குடும்பத்தினர், திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு. வையாபுரி குடும்பத்தினர், நடிகர் ஜோக்கர் துளசி, ராமச்சந்திரன், தயாரிப்பாளர் திருவள்ளுவர் கலைக்கூடம், சென்னை தொழிலதிபர் திரு. குணசேகரன், சென்னை திரு. ஆர்.பிரகாச், வேலூர் துர்காபவன் திரு. உதயசங்கர், மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை பாண்டிச்சேரி திருமதி. சாந்தகுமாரி சுகுமாரன் குடும்பத்தினர்கள் செய்தனர். மேலும் இதில் பங்கேற்ற அனைவரையும் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் புஷ்பயாக பிரசாதம் வழங்கி ஆசிர்வதிதார்.

இந்த புஷ்ப யாகத்தில் சங்கு புஷ்பம், செந்தாமரை, வெண்தாமரை, அரளி, பூவரசம்பூ, வில்வம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ்த்தாமரை.கொன்றை, மகிழம், மல்லிகை, முல்லை, சம்பங்கி, மருது, மருதாணி, தவனம், ரோஜா, கருந்துளசி, துளசி, மனோரஞ்சிதம், பவழமல்லி, மரிக்கொழுந்து, செவ்வந்தி, மஞ்சள் அரளி, தங்கஅரளி செம்பருத்தி, அடுக்கு அரளி, தாழம்பூ, போன்ற 60 க்கும் மேற்பட்ட மலர்களுடன் 2 ஆயிரம் கிலோ புஷ்பங்கள் சேர்க்கப்பட்டன. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Diyas Images
 
Diyas Images
 
Diyas Images