

இன்று 13.06.2019 வியாழக்கிழமை வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் பாதாள சொர்ண சனீஸ்வரருக்கும், ஜெய மங்கள சனீஸ்வரருக்கும், லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வேண்டும் வரங்கள் தரும் லக்ஷ்மி வராஹருக்கும் நடைபெறும் மஹா கும்பாபிஷேகத்தினுடையஇரண்டாவது நாள் பூஜைகள் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் முன்னிலையில் 10 க்கும் மேற்பட்ட சைவ வைணவ ஆச்சார்யர்கள் பங்கேற்று காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை விசேஷ சந்தியா வந்தனம், இரண்டாம் காலயாக பூஜை, ஸ்ரீ சொர்ண சனீஸ்வரர், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரர், ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் கண் திறத்தல், தசதர்சனம், சயனாதி வாசம், தம்பதி சங்கல்பம், திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்று பிரசாதம்வழங்கபட்டது.
தொடர்ந்து மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை மங்கள வாத்தியம், வேதபாராயணம், விசேஷ சந்தியாவந்தனம், மூன்றாம் கால யாக பூஜை, யந்திர ஸ்தாபனம், ஜெய மங்கள சனீஸ்வரர், ஸ்ரீ சொர்ண சனீஸ்வரர், ஸ்ரீலக்ஷ்மி வராஹர் பிம்ப பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதல், ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் ஸ்வாமிக்கு மஹா சாந்திஹோமம், சாந்தி அபிஷேகம், பிம்ப நாடி சந்தானம், தத்துவார்ச்சனை, ஸ்பர்சாஹுதி, நாமகரணம், தம்பதிசங்கல்பம், திரவ்யாஹுதி, பூர்ணாஹுதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
இதில் குற்றாலம் அகஸ்தியர் ஜீவநாடி ஜோதிடர் திரு. முத்தகுமர ஸ்வாமி, கேரளா மாநிலம், கோட்டயம், குறுப்பம்தற நவக்கிரக சனீஸ்வரர் கோவில் மடாதிபதி மாதா ஆர்ஷஸ்ரீ சிவமயி, ஆலப்புழ மான்னார் சனீஸ்வர வைதிக் சன்ஸ்தான் பீடாதிபதி திரு. ஆர்யமித்ர சர்ம, திருநல்லார் சனீஸ்வரர் கோவில் திரு. சுரேஷ் குருக்கள், திரு. ராமகிருஷ்ண சர்ம, புதுச்சேரி திரு. சீனுவாசன், ராமாவரம் திரு. பிரகாஷ், சென்னை திரு. பிர்காஷ், ஊட்டி திரு. ராஜசேகர், காட்பாடி திரு. ஜயசங்கர் அவருகள் பங்கேற்று சிறப்பித்தனர்.
தொடர்ந்து நாளை 14.06.2019 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை நான்காம் கால அவப்ருத யாக பூஜையுடன் கோ பூஜை, விஸ்வரூப தர்சனம், தம்பதி சங்கல்பம், மூலிகை திவ்யாஹுதி, சனீஸ்வர சாந்தி ஹோமம், பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை, யாத்திரா தானம், கடம் புறப்படுதல், லக்ஷ்மி வராஹர் கோபுர சம்ப்ரோக்ஷண மஹா கும்பாபிஷேகம், ஜெய மங்கள சனீஸ்வரர் கோபுர மஹா கும்பாபிஷேகம், சொர்ண சனீஸ்வரர் கோபுர மஹா கும்பாபிஷேகம், ஸ்ரீ லக்ஷ்மி வராஹர் மூலவர் சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேகம், ஸ்ரீ ஜெய மங்கள சனீஸ்வரர் – ஸ்ரீ சொர்ண சனீஸ்வரர் மஹா கும்பாபிஷேகம், மஹா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் பக்தர்களை ஆசீர்வதித்து அருட்பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது.
இவ்வைபவத்திற்கு தவத்திரு இரத்தினகிரி பாலமுருகன் அடிமை, ஸ்ரீபுரம் சிருஷ்டித்த ஸ்ரீ சக்தி அம்மா, கலவை தவத்திரு சச்சிதானந்த ஸ்வாமிகள், மஹாதேவமலை ஸ்ரீ மஹாதேவ சித்தர், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு. S.A.ராமன் I.A.S., மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. P.ப்ரவேஷ்குமார் I.P.S., சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி RMT.டீக்காராமன், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி DR. P.ஜோதிமணி, தொழில்நலத்துறை ஆணையர் DR. R.நந்தகோபால் I.A.S., இராணிபேட்டை கோட்டாச்சியர் திரு. K.இளம்பகவத் I.A.S., மாநிலதகவல் ஆணையர் DR. R.பிரதாப் குமார், இராணிபேட்டை D.S.P. திரு. கலைசெல்வன், R.V.S. Group Chairman DR. K.V.குப்புசாமி கோவை, ஈரோடு ஸ்ரீ அம்மன் டிரஸ்ட் Chairman திருமதி. T.ஜெயலக்ஷ்மி, சென்னை ரெப்கோ வங்கிமுன்னாள் நிர்வாக இயக்குநர் திரு. R.வரதராஜன், சென்னை பாரத ஸ்டேட் வங்கி துணை பொது மேலாளர் திரு. R.குமார், இவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025