Legendary actress Latha Participated in Swati Homam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் உலகநலன் கருதி இன்று 24.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்வாதி நக்ஷத்திரத்தை முன்னிட்டு நடைபெற்ற ஸ்வாதி ஹோமத்தில் பழம்பெரும் நடிகை திருமதி லதா அவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து ஸ்வாமிகளின் ஆசி பெற்றார்.

ஸ்வாதி நட்சத்திரத்தன்று ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை பக்தியுடன் மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் நல்ல பலனை தரும்.எதிரிகளின் தொல்லை விலகும், மரண பயம் நீங்கும், எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும், கடன் சுமை குறையும், நோய் குணமாகும், திருமணத்தடை அகலும், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு கிடைக்கும், வேலையில் இடைஞ்சல் அகலும், நரசிம்மர் நன்மைகளை வாரி வழங்குவார் 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும், என்ற நம்பிக்கையில் ஏராளமானோர் பங்கேற்று பிரார்தனை செய்தனர்.

இந்த யாகத்தில் பலவகையான மலர்கள், வஸ்திரம், நெய், தேன், வெண்கடுகு, வால்மிளகு, சீந்தல்கொடி மேலும் பலவகையான மூலிகைகளும் சேர்க்கப்பட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. இதனை தொர்ந்து பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம்,துளசி தீர்த்தம் கொண்டு தன்வந்திரி பீடத்தல் உள்ள ஸ்ரீகூர்ம லஷ்மி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனமும், பசும்பால்,சர்க்கரை பொங்கல், தயிர் சாதம், பானகம் போன்ற பிரசாதங்களை நைவேத்தியம் செய்து செவ்வரளி மலர்களாலும், துளசி இதழ்களாலும் சிறப்பு அர்ச்சனையுடன் நெய் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images