

வேலூர்மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டையில் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தனது பெற்றோருக்காக சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் மூலிகை வனம், கோசாலை, ஆயுர்வேத மருத்துவம், யோக மையம், தியான மண்டபம், அன்னதான கூடம், ப்ரார்த்தனை கூடம் போன்றவைகளுடன் வாழ்வியல் ஆராய்ச்சி மையமாகவும், ஷண்மத பீடமாகவும் அமைத்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் இரண்டாவது மஹா கும்பாபிஷேகம் வருகிற 29.11.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 7.32 மணி முதல் 9.44 மணிவரை ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கும் இதர 73 பரிவார தெய்வங்களுக்கும், 468 சிவலிங்க ரூபமாக உள்ள சித்தர்களுக்கும் ஏக காலத்தில் மஹா கும்பாபிஷேக வைபவம் நடைபெறுவதை முன்னிட்டு ஸ்வாமிகள் பத்திரிகையாளர்களுக்கு அளித்த தகவல்.
நம் புராணங்களில் எண்ணற்ற கடவுளர் அவதாரங்களைப் பற்றிய கதைகள் இருக்கின்றன. ஒரு மனிதன் வளமாகவும், நிம்மதியாகவும் வாழ்வதற்கு கல்வி, செல்வம், வீரம், ஞானம், ஆரோக்யம் இப்படி பல விஷயங்கள் தேவைப்படுகின்றன. நம் வாழ்வுக்குத் தேவையான இத்தகைய அத்தியாவசிய விஷயங்களை ஒவ்வொரு கடவுளரும் நமக்கு அருளுவதாகப் புராணங்கள் சொல்கின்றன. எனவே சம்பந்ப்பட்ட கடவுளர்களை மனமுருகப் பிரார்த்தித்து, அத்தகைய கலைகளைப் பெற்று தெய்வங்களின் ஆசியுடன் நாம் வாழ்ந்து வருகிறோம்.
கல்விக்கு சரஸ்வதி தேவி, செல்வத்துக்கு லட்சுமி தேவி, வீரத்துக்கு பார்வதி தேவி, ஞானத்துக்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, பகை அகல துர்காதேவி, காரிய வெற்றிக்கு ஆஞ்சநேயர் என்று சொல்லப்படுகிற வரிசையில் நோய்தீர்க்கும் கடவுளாக மாமருத்துவராக வணங்கப்படுகிறார் ஸ்ரீ தன்வந்திரி பகவான். இந்த உலகின் ஆதி மருத்துவக் கடவுளாக ஸ்ரீ தன்வந்திரி பகவானைப் போற்றிப் புகழ்கின்றன புராண நூல்கள்.
ஆங்கில மருத்துவமுறை நம் தேசத்தில் பிரபலமானது என்பது சமீபத்திய காலத்தில்தான். பன்னெடுங் காலமாக மூதாதையர்கள் கைவைத்தியம் மூலமாகத்தான் எந்த ஒரு வியாதியையும் குணப்படுத்தி வந்தனர். எலும்பு முறிவு, அறுவைசிகிச்சை போன்றவற்றுக்கும் கூட பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் சிகிச்சைமுறைகள் இருந்து வந்துள்ளதாகவும் கைதேர்ந்தமருத்துவர்கள் இதை அறிந்து வைத்திருந்ததாகவும் இப்போது படித்து தெரிந்துகொள்கிறோம்.
நம் தேசத்துக்கு மட்டுமே சொந்தமான இத்தைகைய வைத்திய முறைகளை நமக்கு அருளி, நம்மை எல்லாம் பூரண நலத்துடன் காத்து வரும் காக்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவானை அனுதினமும் வணங்குவதே அவருக்கு நாம் செய்யும் மரியாதை மற்றும் நன்றிக்கடனாகும்.
மகாவிஷ்ணுவின் அவதாரமாகத் திருப்பாற்கடலில் இருந்து அவதரித்தவர் ஸ்ரீ தன்வந்திரி பகவான் என்று புராணங்கள் சொல்லும். இன்றைக்கும் பிரபலமான சில வைணவ ஆலயங்களில், தன்வந்திரி பகவானுக்கு தனி சந்நிதி உண்டு. ஆனால், தன்வந்திரி பகவானுக்கென்று பிரத்தியேக ஆலயம் என்றால், அது வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்தான் என்று சொல்லலாம்.
பீடம் அமைவிடம்
உலகமே இன்று பிரமிக்கும் ஸ்ரீ தன்வந்திரி பகவானுக்கு வாலாஜாபேட்டையில் ஏன் பீடம் அமைந்தது?
இது குறித்து ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சொல்வது என்ன?
"பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாண வைபவம் காஞ்சிபுரத்தில் அமையும் சமயத்தில் அந்தத் திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு தரிசிக்க எண்ணற்ற தேவர்களும் ரிஷிகளும், முனிவர்களும், மகான்களும் வரத் தொடங்கினர். அவர்களில் அகத்தியர், பரத்வாஜர், வசிஷ்டர், வால்மீக போன்றோர் உட்பட காஞ்சிபுரத்தில் அடியவர்கள் லட்சக்கணக்கில் திரண்டதால் தங்களது நித்ய அனுஷ்டாங்களையும், பூஜைகளையும் சரிவரச் செய்ய முடியாமல் திண்டாடினார். எனவே, காஞ்சிபுரத்தை விடுத்து அதனை சுற்றியுள்ள தீர்த்தப் பிரதேசங்களுக்குத் தங்களது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டனர். தற்போது பாலாறு என்று அழைக்கப்படும் வேகவதி நதியின் ஓரத்தில் மேற்கண்ட முனிவர்கள் குடில்கள் அமைத்துத் தங்களது அனுஷ்டாங்களைத் தொடங்கினர்.
பகவானின் திருக்கல்யாண வைபவமும் சுபமாக நடந்தேறியது. அங்கிருந்து பயணப்படும் முன் ஆதி நாயகனான பரமேஸ்வரன், முனிவர்களைப் பார்த்து, Tamil version
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025