

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி, உலக மக்கள் ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற வேண்டி நேற்று 14.11.2018 புதன்கிழமை முதல் 25.11.2018 ஞாயிற்றுக்கிழமை வரை பயன் தரும் பத்து ஹோமங்களுடன் ஒரு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யக்ஞம் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு நேற்று 14.11.2018 புதன்கிழமை மாலை பூர்வாங்க பூஜைகள் துவங்கியது. இன்று காலை 7.00 மணியளவில் கோ பூஜை, வேத பாராயணம், விநாயகர் அனுக்ஞை, யாகசாலை பூஜைகள், கலச பூஜைகள், மஹா கணபதி ஹோமத்துடன் நடைபெற்றது. காலை 10.00 மணி முதல் தாமரை விதைகள், தாமரை பூக்களுடன், விசேஷ திரவியங்களுடன் பயன் தரும் பத்து ஹோமங்களுடன் ஒரு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யக்ஞம், திருமதி. நிர்மலா முரளிதரன் அவர்கள் திருக்கரங்களால் குத்துவிளக்கு ஏற்றி குலதெய்வ பூஜை செய்து யாகமானது நடைபெற்று வருகிறது. இந்த யாகம் வருகிற 25.11.2018 ஞாயிற்றுகிழமை வரை நடைபெறுகிறது. இந்த யாகத்துடன் நாளை 16.11.2018 காலை 10.00 மணி முதல், அகில உலக புரோகிதர்கள் நலன் கருதி சிறப்பு தன்வந்திரி ஹோமமும், 17.11.2018 சனிக்கிழமை சனிசாந்தி ஹோமமும், 18.11.2018 ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணியளவில் காலபைரவர் ஹோமமும், 19.11.2018 திங்கள்கிழமை ஏகாதசியை முன்னிட்டு காலை 10.00 மஹா தன்வந்திரி ஹோமமும், 20.11.2018 செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு ருத்ர ஹோமமும், 21.11.2018 புதன்கிழமை காலை 10.00 மணிக்கு மஹா சரஸ்வதி ஹோமமும், 22.11.2018 வியாழக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபார்வதி யாகம், சந்தான கோபால யாகமும், 23.11.2018 வெள்ளிக்கிழமை கார்த்திகை தீபத்தை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு ஸ்கந்த ஹோமமும், 24.11.2018 சனிக்கிழமை வாஸ்து நாளை முன்னிட்டு காலை 10.00 மணிக்கு வாஸ்து சாந்தி ஹோமமும், 25.11.2018 ஞாயிற்றுகிழமை காலை 10.00 மணிக்கு நவக்கிரக ஹோமம், சொர்ணாகர்ஷண பைரவர் ஹோமத்துடன் கோடி ஜப குபேர யக்ஞம் நிறைவு பெறுகிறது.
இந்த ஹோமங்கள் நம்மில் சிலர் செல்வம் இருந்தும் மனதில் நிம்மதியின்றி இருபவருக்கு நிம்மதி கிடைக்கவும், போதிய செல்வம் கிடைத்து வாழ்வில் ,உன்னேறவும், போராட்டமான வாழ்க்கையை மாற்றி ஆன்ந்தம் பெறவும், பணத்தினால் ஏற்படும் தோஷங்கள் அகலவும், மனதில் உள்ள கஷ்டங்கள் நீங்கவும், பணவளக்கலையை அறிந்து மிகுந்த செல்வம் பெற்று வளமோடு வாழவும் நடைபெறுகிறது. இந்த யாகத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். துணைவிக்கு தங்க ஆபரணங்களை வாங்கி வழங்குவீர்கள். மேலும், குழந்தை வரம் கிடைப்பதோடு, இல்லறத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகும். யாகத்தில் பங்கேற்று இங்குள்ள தன்வந்திரி பகவானை தரிசனம் செய்தால் மன நோய்கள், உடல் நோய்கள் நீங்கும்.
ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் :
குபேரன் என்றாலே நமக்கு நினைவில் வருவது தங்கமும், வைடூரியமும், பொற்காசுகளும் நிறைந்த திருப்பதி ஏழுமலையானுக்கே கடன் கொடுத்த கடவுள் என்பதே. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது நம்பிக்கை. குபேர யந்திரம், குபேர யாகம் போன்றவை நம்மை செல்வத்தின் அதிபதியாக்கும் என நம்பப்படுகிறது.
லட்சுமி குபேரர் திருக்கோவில் :
ஆரோக்ய ஐஸ்வர்ய பீடமாக திகழும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம், தமிழகத்தில் வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுபேட்டையில் அமைந்துள்ளது. ஆரோக்யத்திற்காக ஸ்ரீ தன்வந்திரி பகவானையும், ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மியையும், கல்விக்காக ஸ்ரீ சரஸ்வதி மற்றும் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவரையும், செல்வத்திற்காக ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவரையும், குபேர சம்பத்திற்காக ஸ்ரீ லட்சுமி குபேரரையும் பிரதிஷ்டை செய்து சீரான செல்வம் நமக்கு வந்தடையவும், இழந்த செல்வத்தை மீட்கவும் தினசரி பூஜைகளும் யாகங்களும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் நடைபெற்று வருகிறது.
திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க செல்லும் அனைத்து பக்தர்களும், திருப்பதி செல்லும் முன் வாலாஜாபேட்டை – திருப்பதி மார்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஆட்சிபுரிகின்ற லட்சுமி குபேரரை நீங்கள் வழிபட்டு திருப்பதி செல்வது மிகவும் மேலான பலன்களை தரும் என்கிறார் பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.
ஆரோக்ய பீடத்தின் சிறப்பு :
ஷண்மத பீடமாகவும், சமத்துவ பீடமாகவும், ஐஸ்வர்யம் மற்றும் ஆரோக்ய பீடமாக திகழும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வேறெங்கும் காணமுடியாத வகையில் மிகச்சிறப்பான முறையில், அழகான முகத்துடன், காண்போரைக் கவரும் புன்சிரிப்புடன் வெள்ளிக்கவசத்தில் காட்சி தரும் லக்ஷ்மி குபேரர் காட்சி நம்மனதில் ஒருவித பரவசத்தை ஏற்படுத்துகிறது. இடது கையில் சங்கநிதி, வலது கையில் பதுமநிதியுடன் கலசத்தை அணைத்துக் கொண்டு லட்சுமி அம்மையாருடனும், துணைவி சித்ரலேகா, பத்ரா எனும் சித்தரிணீயுடனும் இப்பீடத்தில் காட்சியளிக்கிறார். மூலவர் தன்வந்திரி பகவான் சன்னதி சுற்றியுள்ள பிரகாரத்தில் லட்சுமி கணபதி, மரகதலிங்கம், கார்த்திகைகுமரன், அன்னபூரனி, லக்ஷ்மி நரசிம்மர், கார்த்தவீர்யார்ஜுனர், வாஸ்து பக்வான், ஐஸ்வர்ய ப்ரத்யங்கிரா தேவி, சஞ்சீவி ஆஞ்சநேயர் உள்ளிட்ட 75 பரிவார மூர்த்திகளுடன் 468 சித்தர்கள் சிவலிங்க ரூபமாக உள்ளன.
குபேரன் வரலாறு :
குபேரர் சிவபெருமானின் மீது அதிக பக்தி கொண்டவர். குபேரரின் தவத்தைக் கண்டு சிவன் காட்சி தந்தார். சிவனுடன் அழகின் மொத்த உருவமாகக் காட்சியளித்த பார்வதியைக் கண்ட குபேரன் அழகில் மயங்கிப் போனார். இதனால் ஆத்திரமடைந்த பார்வதி குபேரனின் ஒரு கண்ணை வெடிக்கச் செய்தார். பின், அவர் மன்னிப்புக் கேட்க வெடித்த கண்ணுக்கு பதிலாகச் சிறிய கண்ணை வரமாக தந்தார் சிவபெருமான். அத்துடன், குபேரரின்தவத்தை பாராட்டி காவலர்களில் ஒருவராக சிவன் நியமித்தார். குபேரனை தன தானிய அதிபதியாக லட்சுமி தேவி நியமித்தார். அன்று முதல் இன்று வரை தனத்திற்கும், தானியத்திற்கும் காவலராக இருந்து வேண்டுபவர்களுக்கு செல்வ வளம் தரும் கடவுளாக குபேரன் உள்ளார்.
சிறப்பு யாகங்கள் :
தன்வந்திரி பீடத்தில் 365 நாட்களும் வைபவங்கள் யாகங்களுடன் நடைபெறுகின்றன. தீபாவளி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். அதனைத் தவிர்த்து வைகுண்ட ஏகாதசி, அட்சய திருதியை, அமாவாசை, பௌர்ணமி, அஷ்டமி, பஞ்சமி, திருவோணம், ஸ்வாதி, ஷஷ்டி உள்ளிட்ட தினங்களில் ஸ்ரீ தன்வந்திரி பகவானுடன் இங்குள்ள குபேரருக்கு சிறப்பு வழிபாடும், பிரார்த்தனையும் செய்யப்படுகிறது.
வழிபாடு :
இத்தலத்தில் உள்ள லட்சுமி குபேரரையும், சொர்ணாகர்ஷண பைரவரையும் சிறப்பு யாகங்கள், அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்து புத்தாடைகள் சாற்றி பிரார்த்தனை செய்யுகின்றனர். மேலும் புது வீடு, நிலம், வாகனம் வாங்குவோர், அல்லது வாங்க திட்டமிடுவோர் முன்னதாக இப்பீடத்தில் உள்ள வாஸ்து பகவானுடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரரிடம் கோரிக்கை வைத்து வழிபட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
எப்போது, எப்படிச் செல்வது ?
இத்திரு நாட்டில் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுடன் லட்சுமி குபேரர், விநாயக தன்வந்திரி, பட்டாபிஷேக ராமர் என 75 பரிவார மூர்த்திகளுக்கு ஷண்மதங்களுக்கும் உள்ள தனிக் கோவில் என்றால் அது வேலூர், வாலாஜாபேட்டை உட்பட்ட கீழ்புதுப்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் தான். இப்பீடம் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். வேலூர் மாநகரத்தில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திலும், வாலாஜா ரோடு ரயில் நிலயத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இப்பீட்த்திற்கு வரலாம். சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இத்தலத்தை அடைய பேருந்து வசதிகள் உள்ளது.
வாரந்தோறும் வெள்ளிக் கிழமையன்று இத்தல இறைவனையும், குபேரரையும் வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவ்வாறு வேண்டிய காரியம் நிறைவேறியதும் பக்தர்கள் மூலவருக்கு அபிஷேகம் செய்து, குபேரருக்கு மலர் சூட்டி நிவாரணம் பெறுகின்றனர். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த பீடத்தில் மக்கள் நன்மை பெறும் விதத்தில் ஒரு கோடி தாமரை விதைகளை கொண்டு கோடி ஜபத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரர் யாகமும் செல்வ அருள் பெறவும், வழக்கில் வெற்றி பெறவும், பயங்கள் அகலவும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்ப்படவும், வெளிநாடு செல்லும் யோகமும் கிடைக்க ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் யாகம் செவ்வரளி மற்றும் தாமரை மலர்கள் கொண்டு நடைபெறும் இந்த யாகங்களில் அனைவரும் பங்கேற்று ஸ்ரீ குபேர லக்ஷ்மி அருள் பெற்று நலமுடன் வாழ அன்புடன் அழக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025