

Sri Danvantri Aogya Peedam,Kilpudupet, Walajapet, Vellore District.
Kodi Deepam Kodi Archana
From Sunday 9th July 2017 Onwards
" Om Namo Bhagavate Vasudevaya Danvantraye
Amrutha Kalasa Hasthaaya Sarva Amaya Vinasanaya
Thri Lokya Nadhaya Sri Maha Vishnave Namaha "
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக அமைதி வேண்டியும், உலக நலனுக்காகவும்,உடல் நலம்,மனநலம்,வேண்டியும், மழை வேண்டியும், இயற்கை வளம் பெறவும், சகல விதமான ஜீவராசிகளும் உஜ்விக்கவும், விவசாய பெருமக்களின் நலனுக்காகவும், பொருளாதாரம் உயரவும் இன்று காலை 7.30 மணி முதல் குரு மஹான்களின் ஆசிகளுடன் அனைத்து செயல்களிலும் வெற்றி பெறவும் ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு கோடி அர்ச்சனையுடன் கோடி தீபம் ஏற்றும் வைபவம் குரு பூர்ணிமா நாளான இன்று தன்வந்திரி பீடத்தில் துவங்கியது..
இந்த நிகழ்ச்சியை அரக்கோணம் தபால் துறையை கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் மற்றும் ஆன்மீக பத்திரிக்கை எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் திரு.பரணிகுமரன் அவர்களும் பெங்களுர் இஸ்ரோ அதிகாரி திரு.சீனிவாசன் சித்தூர் R.T.O. திரு.கே.ரவீந்திரகுமார் அவர்கள் குத்து விளக்கு ஏற்றி. கோடி தீபம் கோடி அர்ச்சனை துவக்கி வைத்தனர்.இதனை தொடர்ந்து நவாவர்ண பூஜையும்,தன்வந்திரி ஹோமமும்,மூலவர் தன்வந்திரிக்கு மஹா அபிஷேகமும் சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா,கர்நாடகா, பாண்டிச்சேரி,பக்தர்கள் கலந்து கொண்டு கோடி தீபத்தில் தன்வந்திரி பீடத்தில் அமைந்துள்ள காலச்சக்கரத்தை வலம் வந்து கால பைரவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிட்ம் ஆசி பெற்றனர். இந்நிகழ்ச்சயில் தன்வந்திரி பீடத்தில் ,வருகிற 16.07.2017 நடைபெற உள்ள சுமங்கலி பூஜை, முனீஸ்வர பூஜை , நவகன்னி பூஜை நல்ல முறையில் நடைபெற்று 21.07.2017 ஆடி முதல் வெள்ளிக் கிழமை தமிழகத்தில் முதல் முறையாக நடைபெற உள்ள கோ லஷ்மி திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெறவும் 23.07.2017 முதல் 30.07.2017 வரை நடைபெறும் சகஸ்ர சண்டியாகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கவும் யாகம் சிறப்பாக நடைபெறவும் பிரார்த்தனை நடைபெற்றது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025