Kaladosha Nivarthi Yagm & Sani Santhi Homam

வாழ்வில் முன்னேற்றமடைய பலவிதமான முயற்சிகளை நாம் மேற்கொண்டாலும் பலவிதமான சஞ்சலங்கள் வந்து முயற்சியை தடுக்கிறது.. அதில் பெரிதும் பங்கேற்பது நவகிரகங்களில் ஒன்றான சனிகிரகத்தினால் ஏற்படும் சஞ்சலம் பெரிதும் வள்ர்ச்சியை பாதிக்கிறது. பெரும்பாலான ஜாதகருக்கு சனிதிசை, சனிபுக்தி, சனி அந்தரத்தினாலும் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

அதனால் காரியத்தடை, திருமணத்தடை, குழந்தை பாக்யதடை, தொழில் அபிவிருத்தி தடை போன்ற பலதடைகளும் ஏற்பட்டு மன உளச்சளுக்கு ஆளாகின்றனர். இத்தகைய தடைகளுக்கு நிவாரணம் தேடும் வகையில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைதன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி நாளை 01.07.2017 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சனி ப்ரீத்தி ஹோமம் காலதோஷ நிவர்த்தி ஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமம் பித்ரு தோஷ நிவர்த்திக்காகவும், ஆயுள் அபிவிருத்திக்காகவும் இந்த யாகத்தில் கருப்பு நிற வஸ்த்திரம், நீலநிற வஸ்த்திரம், பச்சரிசி, நெல், எள், நெல்பொரி, நல்லெண்ணைய், வெல்லம் வன்னி, சமித்து போன்ற பொருட்கள் சேர்க்கப்படவுள்ளது ஹோமத்தின் நிறைவாக காலசக்கர பூஜை பைரவர் பூஜை சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images