

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் “யக்ஞஸ்ரீ” முரளிதர ஸ்வாமிகள் கடந்த 15 ஆண்டுகளாக உலக மக்களின் பல்வேறு தேவைகளை மனதில் கொண்டு யாகம், யாகம் என்ற வகையில் 365 நாட்கள் 365 யாகங்கள், 55 நாட்கள் 135 யாகங்கள், 24 மணி நேரம் 27 ஹோமங்கள், 74 யாக குண்டங்களில் 74 சிவாச்சாரியர்கள் அமர்ந்து 74 பைரவர் ஹோமங்கள், 108 யாக குண்டங்களில் 108 கணபதி யாகம், 468 யாக குண்டங்களில் 468 சித்தர்கள் யாகம், லக்ஷம் லட்டு கொண்டு குபேர யாகம், லக்ஷம் நெல்லிக்கனி கொண்டு கனகதாரா யாகம், லக்ஷம் தாமரை பூ கொண்டு அஷ்ட லக்ஷ்மி யாகம், லக்ஷம் கொழுக்கட்டைகள் கொண்டு வாஞ்சாகல்ப கணபதி ஹோமம், 10 லக்ஷம் ஏலக்காய் கொண்டு ஹயக்ரீவர் ஹோமம்கோடி ஜப தனலக்ஷ்மி யாகம், கோடி தாமரை விதைகள் கொண்டு குபேர ஹோமம், கோடி தன்வந்திரி ஜப ஹோமம், 1000 சண்டி யாகம், அதிருத்ர மஹா யாகம், 6000 கிலோ மிளகாய் வற்றல் யாகம், 2014 பூசணிக்காய் கொண்டு கூச்மாண்ட யாகம் போன்ற பல்வேறு பிரம்மாண்ட யாகங்கள் மட்டுமின்றி கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபார்வதி யாகம், சந்தான கோபால யாகம், சத்ரு சம்ஹார யாகம், அஷ்ட பைரவர் யாகம், போன்ற 100 க்கும் மேற்பட்ட காரியசித்தி யாகங்கள் தன்வந்திரி பீடத்தில் பக்தர்களின் வசதிக்கு தகுந்தவாறு தினம் தோறும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் வருகிற மார்ச் 13 முதல் மார்ச் 17 வரை ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழாவை 16 தெய்வ திருமணங்களுடன், பல்வேறு வைபவங்களும், 600 க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர வித்வான்கள் பங்கேற்கும் நாத சங்கம நிகழ்ச்சியும், 1000 கலசங்கள் கொண்டு தன்வந்திரி மூலவருக்கு சஹஸ்ர கலசாபிஷேகமும், சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய வைபவங்களில் பக்தர்கள் பங்கேற்கவும், தெய்வங்களின் அருள் அனைவருக்கும் கிடைக்கும் பொருட்டு சென்ற 03.01.2019 முதல் 03.03.2019 வரை ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தியை குறிப்பிடும் வகையில் 58 நாட்கள் வகையான ஆரோக்யம், ஐஸ்வர்யத்தை அள்ளித்தரும் 58 யாகங்களும், கால பைரவருடைய பரிபூரண அருள் அனைவருக்கும் பெற்று தரும் வகையில் 58 நாட்களும் கோடி ஜப காலபைரவர் ஹோமம் நடைபெற உள்ளது.
03.01.2019 வியாழக்கிழமை மஹா கணபதி யாகம் - சகல காரிய ஸித்தி.
04.01.2019 வெள்ளிக்கிழமை பாலமுருகன் ஹோமம் – ஞானம் பெறவும் நோய்கள் நீங்கவும்.
05.01.2019 சனிக்கிழமை அமாவாசை யாகம் – சகல பாப தோஷ நிவர்த்தி.
06.01.2019 ஞாயிற்றுக்கிழமை காயத்ரி ஹோமம் – வேதத்தின் மஹிமையால் வேதனைகள் தீரும்.
07.01.2019 திங்கள்கிழமை ருத்ர ஹோமம் – இயற்கை சீராகவும், விவசாயம் பெருகவும்.
08.01.2019 செவ்வாய்கிழமை திருவோண ஹோமம் – உடல் சம்பந்தமான நோய்கள் நீங்கி மஹாலக்ஷ்மியின் அருள் பெற.
09.01.2019 புதன்கிழமை மஹாலக்ஷ்மி யாகம் - செல்வம் பெருக வழி வகுக்கும்.
10.01.2019 வியாழக்கிழமை தக்ஷிணாமூர்த்தி ஹோமம் – தடைகள் விலகும்.
11.01.2019 வெள்ளிக்கிழமை வராஹி ஹோமம் - செய்வினை தோஷங்கள் அகல.
12.01.2019 சனிக்கிழமை சத்ரு சம்ஹார ஹோமம் - எதிரிகளின் தொல்லை விலகவும், பூமி தோஷங்கள் அகலவும்.
13.01.2019 ஞாயிற்றுக்கிழமை நவ கன்னி ஹோமம் – குலதெய்வங்களின் அருள் பெற.
14.01.2019 திங்கள்கிழமை காளி யாகம் – மாந்த்ரீக தோஷம் விலகவும், அம்பாள் அருள் பெறவும்.
15.01.2019 செவ்வாய்கிழமை ஆதித்ய ஹோமம் - கண் பார்வை கோளாறு நீங்க அரசாங்க ஆட்சி பதவிகள் தரும்.
16.01.2019 புதன்கிழமை காமதேனு ஹோமம் – சகலமும் தரும்.
17.01.2019 வியாழக்கிழமை தன்வந்திரி ஹோமம் – சகல ஆரோக்யம் தரும்.
18.01.2019 வெள்ளிக்கிழமை ம்ருத்ஞ்சய ஹோமம் – அபம்ருத்தி தோஷம் விலகும். 19.01.2019 சனிக்கிழமை அஷ்டாக்ஷரி ஹோமம் – ஸ்ரீமன் நாராயணன் அருள் பெற.
20.01.2019 ஞாயிற்றுகிழமை சுயம்வர கலாபார்வதி யாகம் - விரைவில் திருமணம் நடைபெறும்.
21.01.2019 திங்கள்கிழமை வள்ளலார் ஹோமம் – வள்ளல் பெருமாணின் அருள் கடாக்ஷம் கிடைக்க.
22.01.2019 செவ்வாய்க்கிழமை காலசர்ப்ப தோஷ ஹோமம் – சர்ப தோஷங்கள் விலகும்.
23.01.2019 புதன்கிழமை ப்ரத்யங்கிரா யாகம் – சகல காரியங்களிலும் நன்மை.
24.01.2019 வியாழக்கிழமை சங்கடஹர கணபதி யாகம் - வழக்குகளில் வெற்றி.
25.01.2019 வெள்ளிக்கிழமை அன்னபூரணி ஹோமம் - அன்ன தோஷம் நீங்கும்.
26.01.2019 சனிக்கிழமை வாஸ்து ஹோமம் – வாஸ்து தோஷம் விலக.
27.01.2019 ஞாயிற்றுக்கிழமை துர்கா ஹோமம் – தீமைகள் ஒழிந்து நன்மைகள் பெற.
28.01.2019 திங்கள்கிழமை சொர்ண கால அஷ்ட பைரவர் யாகம் – சகல தடைகள் நீங்க.
29.01.2019 செவ்வாய்கிழமை காலசக்கிர ஹோமம் – நவக்கிரக, நக்ஷத்திர தோஷங்கள் விலக.
30.01.2019 புதன்கிழமை மாமேரு யாகம் – அம்பாள் அருள் பரிபூரணமாக கிடைக்க.
31.01.2019 வியாழக்கிழமை லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் – ருண, ரோக, சத்ரு தோஷ நிவர்த்தி.
01.02.2019 வெள்ளிக்கிழமை ஹனுமந்த ஹோமம் – மன திடம் கிடைக்கும், பயம் அகலும்.
02.02.2019 சனிக்கிழமை சனி கிரக சாந்தி ஹோமம் – சனி கிரக தோஷம் நீங்கும்.
03.02.2019 ஞாயிற்றுகிழமை சூர்ய கிரக சாந்தி ஹோமம் – சூர்ய கிரக தோஷம் நீங்கும்.
04.02.2019 திங்கள்கிழமை சந்திர கிரக சாந்தி ஹோமம் – சந்திர கிரக தோஷம் நீங்கும்.
05.02.2019 செவ்வாய்கிழமை அங்காரக கிரக சாந்தி ஹோமம் – அங்காரக கிரக தோஷம் நீங்கும்.
06.02.2019 புதன்கிழமை புதன் கிரக சாந்தி ஹோமம் – புதன் கிரக தோஷம் நீங்கும்.
07.02.2019 வியாழக்கிழமை குரு கிரக சாந்தி ஹோமம் – குரு கிரக தோஷம் நீங்கும்.
08.02.2019 வெள்ளிக்கிழமை சுக்கிர கிரக சாந்தி ஹோமம் – சுக்கிர கிரக தோஷம் நீங்கும்.
09.02.2019 சனிக்கிழமை லக்ஷ்மி நாராயண ஹோமம் - தரித்ரம் நீங்கி மஹாவிஷ்ணு, மஹாலக்ஷ்மி அருள் கிடைக்கும்.
10.02.2019 ஞாயிற்றுகிழமை வருண ஜப ஹோமம் – மழை வேண்டியும், இயற்கை வளம் வேண்டியும்.
11.02.2019 திங்கள்கிழமை சுப்ரமண்ய ஹோமம் - எதிரிகள் வேருடன் வீழ்ச்சி அடைவார்கள்.
12.02.2019 செவ்வாய்க்கிழமை வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஹோமம் - பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர, திருமணம் கைக்கூட.
13.02.2019 புதன்கிழமை தத்தாத்ரேயர் யாகம் - குழந்தை பாக்யம், குடும்ப மகிழ்ச்சி பெற.
14.02.2019 வியாழக்கிழமை சந்தான கோபால கிருஷ்ண யாகம் - வாரிசு பாக்கியம் உண்டாகும்.
15.02.2019 வெள்ளிக்கிழமை சத்ய நாராயண ஹோமம் - சகல அனுக்ரஹம் ஏற்படும்.
16.02.2019 சனிக்கிழமை பட்டாபிஷேக ராமர் ஹோமம் – அரசாங்க பதவி பெறவும், பதவியில் முன்னேற்றம் ஏற்படவும்.
17.02.2019 ஞாயிற்றுக்கிழமை முனீஸ்வரர் ஹோமம் – குல தெய்வ அருள் கிடைக்க.
18.02.2019 திங்கள்கிழமை ராமகிருஷ்ண பரமஹம்சர் ஹோமம் – குரு அருள் பெற.
19.02.2019 செவ்வாய்கிழமை கந்தர்வ ராஜ ஹோமம் - ஆண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற.
20.02.2019 புதன்கிழமை மங்கள கௌரி ஹோமம் – மாங்கல்ய பலம் பெற.
21.02.2019 வியாழக்கிழமை கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமம் - இழந்தவைகள் மீட்க.
22.02.2019 வெள்ளிக்கிழமை ஹயக்ரீவர் ஹோமம் – கல்வியில் முன்னேற்றம் பெற.
23.02.2019 சனிக்கிழமை சுதர்சன ஹோமம் - எதிரிகள் பயம் நீங்க, கோமாதா ஆரோக்யம் பெற.
24.02.2019 ஞாயிற்றுகிழமை சரஸ்வதி ஹோமம் – படிப்பில் கவனம், வாக்கு பலிதம் ஏற்பட.
25.02.2019 திங்கள்கிழமை குபேர லக்ஷ்மி யாகம் - கடன் நீங்க, பண வசதி பெருக.
26.02.2019 செவ்வாய்கிழமை சூலினி துர்கா ஹோமம் - சர்ப தோஷம், தசாபுக்தி தோஷம் நீங்க, மனக்கவலை அகலும்.
27.02.2019 புதன்கிழமை ஸ்ரீ ரங்கநாதர் ஹோமம் – சுக்கிர கிரக தோஷ நிவர்த்தி.
28.02.2019 வியாழக்கிழமை ஸ்ரீ அஷ்டநாக கருட ஹோமம் – விபத்துக்கள் தடுக்க, பக்ஷி தோஷம் அகல.
01.03.2019 வெள்ளிக்கிழமை ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி ஹோமம் – ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற.
02.03.2019 சனிக்கிழமை ஸ்ரீ மணிகண்ட ஹோமம் - தர்ம சாஸ்தா அருள் கிடைக்கும்.
03.03.2019 ஞாயிற்றுக்கிழமை கோடி ஜப சொர்ண கால மஹாபைரவர் ஹோமம் மஹா பூர்ணாஹுதி.
இந்த 58 யாகங்களுக்குரிய தெய்வங்கள் இங்கே பிரதிஷ்டை ஆகியுள்ளதால் அந்தெந்த ஹோமத்தின் புனித நீர் அதற்குறிய தெய்வங்களுக்கு சேர்ப்பித்து சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பவர்கள் பூசணிக்காய், சிவப்பு அரளி, உளர் திரக்ஷை பழங்கள், மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், மஞ்சள், குங்குமம், வாசனை திரவியங்கள், தேங்காய், மிளகு, நல்லெண்ணை, எலுமிச்சம்பழம், பழங்கள், மாதுளம் பழங்கள், புஷ்பங்கள், மலர் மாலைகள், வஸ்திரங்கள், மளிகை பொருட்கள் கொடுத்து பக்தர்கள் அனைவரும் இம்மாபெரும் யாகத்திருவிழாவில் பங்கேற்று பக்வத் கைங்கர்யத்தில் கைங்கர்யம் செய்து தன்வந்திரி பகவான் மற்றும் சகல தேவதா அருளுடன் அஷ்ட பைரவர்கள் மற்றும் சொர்ண கால பைரவர் அருள் பெற்று நீண்ட ஆயுள், நிலையான செல்வத்துடன் நலம் பெற அன்புடன் அழைக்கின்றோம். இறையருளுடன் குருவருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025