

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தன்தாய் தந்தை ஆசிர்வாதத்துடன் 2003ம் ஆண்டு முதல் இன்று வரை தன்வந்திரி பெருமாள் மட்டுமின்றி சைவம், வைணவம் ,சாக்தம் ,சௌரம், கௌமாரம்,காணாபத்தியம் போன்ற சன்மதங்களுக்கும் 75க்கு மேற்பட்ட திருச்சன்னதிகள் அமைத்தும் 468 சித்தர்கள் சிவலிங்க ரூபமாக விக்கிரகம் அமைத்து ஸ்வாமிகளின் பெற்றோர்களுக்கும் ஆலயம் அமைத்து தினமும் உலக நலனுக்காக பல்வேறு விதமான யாகங்களையும் ஹோமங்களையும் செய்து வருகிறார்..இவை மட்டுமின்றி ஆயுர்வேத மருத்துவமனை, முதியோர் இல்லம், யோகா மையம்,கோ சம்ரக்ஷணாவும் நித்தமும் அன்னதானமும் செய்து வருகிறார்.மேலும் ஆண் பெண் திருமணம் நடைபெற,சுயம்வர கலா பார்வதி யாகமும், குழந்தை பாக்கியம் வேண்டி, சந்தான கோபால யாகமும் நோய் நொடிகள் நீங்க தன்வந்திரி ஹோமமும் பித்ரு தோஷம் நீங்க திலத் தர்ப்பண ஹோமமும் சண்டி ஹோமம், ப்ரத்தியங்கிரா ஹோமம்,போன்ற பல்வேறு விதமான ஹோமங்களை சுகப்ரம்ஹ ரிஷியின் ஒலைச்சுவடியில் வரும் வழிகாட்டுதல் படி செய்து வருகிறார்.பங்குனி உத்திரம் முதல் தன்வந்திரி பீடத்தில் பூஜா முறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் நேற்று பௌர்ணமியை முன்னிட்டு அனைத்து சன்னதிகளில் உள்ள தெய்வங்களுக்கு இரவு 12.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஸ்ரீ அன்னபூரணி தேவிக்கு அன்னாபிஷேகத்துடன் அன்ன படையல் நடைபெற்றது .இனி வரும் காலங்களில் கீழ் கண்ட தினங்களில் சிறப்பு அபிஷேகமும் ஹோமங்களும் நடைபெற உள்ளது.
பிரதி ஞாயிறு தோறும் காலை ஸ்ரீ ஆராக்ய லஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கும் ஸ்ரீ பால் முனீஸ்வரர், ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜீனர் சன்னதிகளுக்கும் திங்கள் காலை ஸ்ரீ மரகாதாம்பிகை சமேதஸ்ரீ மரகதீஸ்வர்ருக்கம் செவ்வாய் காலை வாஸ்து பகவான் ,பாரதமாதா,மற்றும் காலச்சக்கரம் புதன் கிழமை காலை லஷ்மி ஹயக்ரீவர் தத்தாத்ரேயர்,,வியாழக் கிழமை காலை ஸ்ரீ சுதர்சனர், சீரடி பாபா,மகாவீர்ர், கருடாழ்வர் சன்னதிகளுக்கும் வெள்ளி காலை ஸ்ரீ லஷ்மி குபேரருக்கும் ஸ்ரீ பால ரங்கநாதர் சன்னதிகளுக்கும் சனிக் கிழமை ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் செந்தூர ஆஞ்சநேயருக்கும் மஹா அபிஷேகங்களும் ஹோமங்களும் நடைபெற உள்ளது.இவைமட்டுமின்றி அமாவாசை நாளில் நண்பகல் 12.00 மணியளவில் சத்ரு சம்ஹார சூலினி ப்ரத்தியங்கிரா யாகமும் திலத் தர்ப்பண ஹோமமும் ஸ்ரீ பட்டாபிஷேக ராமர்,ராகுகேது, ஸ்ரீபாதம் ஸ்வாமிகளின் பெற்றோரின் திருச்சன்னதிகளுக்கு சிறப்பு ஆராதனையும் தேய்பிறை அஷ்டமியில் மாலை மகிஷாசுர மர்த்தினி சன்னதியில் மகா மிருத்திஞ்ச ஹோமமும் பைரவர் சன்னதியில் சொர்ண பைரவர் ஹோமமும் கால பைரவர் ஹோமமும் மஹா அபிஷேகமும் நடைபெற உள்ளது. அந்த வகையில் நேற்று இரவு நடுநிசியில் விழா சிறப்பாக நடைபெற்றது.பக்தர்கள் அனைவரும் மேற்கணட தினங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று பலன் பெற வேண்டுகிறோம்.
Tamil version
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025