

வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், அனந்தலை கிராமம், கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மேற்கண்ட தினங்களில் ஸம்வத்ஸர அபிஷேக விசேஷ ஹோம சப்தாஹம் நடைபெற உள்ளது.
கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி, திருமதி. நிர்மலா முரளிதரன் அவர்களின் பரிபூரண ஒத்துழைப்புடன் ஆச்சார்ய பெருமக்களின் ஆலோசனையின்படி ஸ்ரீ ஆரோக்ய லட்சுமி ஸமேத தன்வந்திரி பெருமாளுக்கும், ஸ்ரீ மரகதாம்பிகை ஸமேத மரகதேஸ்வரருக்கும் இதர 73 விதமான பரிவார தெய்வங்களுக்கும், 468 சித்தர்களுக்கும் சென்ற ஆண்டு 29.11.2015 அன்று மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இதன் ஸம்ப்ரோக்ஷணம் நிறைவு விழா ஐப்பசி 28ம் தேதி (13.11.2016) முதல் கார்த்திகை 4ம் தேதி (19.11.2016) வரை காணாபத்யம், கெளமாரம், செளரம், ஸ்ரீ சாக்தம் மற்றும் வைணவம் அகிய ஆறு மதங்களில் உள்ள தெய்வங்களுக்கும், மஹான்களுக்கும் ஸம்வத்ஸராபிஷேகம் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்வைபவத்தில் அனைவரும் பங்கேற்று குருவருளுடன் திருவருள்பெற அன்புடன் அழைக்கின்றோம். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
நிகழ்ச்சி நிரல்:
13.11.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை மங்கள இசை, கோ பூஜை, வேத பாராயணம், விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், தேவதா அனுக்ஞை, கிராம தேவதா பூஜை, முனீஸ்வர பூஜை, நவகன்னி பூஜை, வாஸ்து ஹோமம், மஹா பூர்ணாஹுதி, கலச புறப்பாடு, ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை, தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்குதல்.
14.11.2016 திங்கட்கிழமை காணபத்யம் சார்ந்த ஹோமங்கள்
15.11.2016 செவ்வாய் கிழமை கெளமரம் சார்ந்த ஹோமங்கள்
16.11.2016 புதன் கிழமை செளரம் சார்ந்த ஹோமங்கள்
17.11.2016 வியாழக்கிழமை சைவம் சார்ந்த ஹோமங்கள்
18.11.2016 வெள்ளிக் கிழமை ஸ்ரீ சாக்தம் சார்ந்த ஹோமங்கள்
19.11.2016 சனிக் கிழமை வைணவம் சார்ந்த ஹோமங்கள்
தொடர்புக்கு்:
ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடம்
கீழ் புதுப்பேட்டை, அனந்தலை மதுரா
வாலாஜாபேட்டை Tamil version
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025