

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் பிரதி மாதம் தேய்பிறை அஷ்டமியில் 10 பைரவர் யாகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற 29.12.2018 சனிக்கிழமை காலையில் சொர்ணாகர்ஷண பைரவர் யாகமும், மாலையில் பீட்த்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 1. அசிதாங்க பைரவர் (அன்னம்) 2. ருரு பைரவர் (ரிஷபம்) 3. சண்ட பைரவர் (மயில்) 4. குரோதன பைரவர் (கருடன்) 5. உன்மத்த பைரவர் (குதிரை) 6. கபால பைரவர் (யானை) 7. பீஷண பைரவர் (சிம்மம்) 8. சம்ஹார பைரவர் (நாய்) போன்ற அஷ்ட பைரவர்களுக்கும் மற்றும் மஹாபைரவருக்கும் சிறப்பு யாகத்துடன் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடைபெற உள்ளது.
இந்த யாகம் இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் போன்ற பல்வேறு வகையான காரணங்களுக்காக நடைபெறுகிறது. மேலும் தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வவளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது. ஆகவே தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்குவது மிகச் சாலச் சிறந்தது. ஏனெனில் காலபைரவரை அன்று அஷ்டலட்சுமிகளும் வணங்குவதால் வணங்குபவருக்கு அனைத்து நலன்களும் கிட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் என்றால்ப அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை. நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும். நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் ஹோமம் ஆகும். ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்; அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும். மேலும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் ஹோமத்தின் மூலம் 1. வர வேண்டிய பணம் வந்துவிடும். 2. தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும். 3. வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும், வலியும், வேதனையும் பெருமளவு குறையும். 4. சனியின் தாக்கம்(ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும். 5. வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்; தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும். 6. அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும். 7. பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும். 8. நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும். பைரவரை வணங்குதலால் ஏற்படும் பலன்கள் 1. தலை குனியா வாழ்க்கை. 2. சுப மங்களம் ஊர்ஜிதம். 3. தீயவினைகள் முற்றிலும் அழிவு. 4. பிறவியின் பலனை முழுவதுமாக உணர்தல். 5. தடையில்லாமல் சவுகரியம் ஏற்படுதல். 6. கர்வம் இல்லாமல் சமயோஜித பாக்கியம்கிடைக்கும். 7. கிரகண தோஷங்களின் பாதிப்பு விலகுதல். 8. வாழ்ந்த ஜனனங்களின் பிறவியை புனிதப்படுத்துதல். 9. இறைவனை எளிதாக உணர்தல். 10. உலக உயிரினங்களின் காவல் தெய்வம் என்பதை உலகுக்கு உணர்த்தி நன்மை பெற செய்யும். இத்தகைய சிறப்பு வாய்ந்த யாகங்களில் அனைவரும் கலந்து கொண்டு அஷ்ட பைரவர், சொர்ணாகர்ஷண பைரவர் மற்றும் மஹாபைரவர் அருள் பெற அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Tamil version
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025