

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் உலகமக்களின் நலன் கருதி பல்வேறு விதமான சமூதாய பணிகளை கடந்த15 ஆண்டுகளாக ஸ்ரீ மாருதியின் உதவிக்கரங்கள் ,ஸ்ரீ தன்வந்திரிஆரோக்கிய பீடம் என்கிற அறக்கட்டளைகள் சார்பாக ஸ்தாபகர் டாக்டர்கயிலை ஞானகுரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் செய்துவருகிறார்
இன்று 23.06.2016 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சுமார் 20 லட்சம் ரூபாய் அளவில் புதியதாகவடிவமைக்கப்பட்டு ஸ்ரீ .வி. எஸ். தேசிகாச்சாரி கலை பண்பாட்டு அரங்கத்Iதை சென்னையை சேர்ந்த ரெப்கோ ஹோம் நிதிநிறுவன நிர்வாக இயக்குனர் திரு.ஆர்.வரதராஜன் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்தார்.திருமதி எம். வீரஷண்முகமணி ஆணையாளர் இந்துசமய அறநிலை ஆட்சித்துறை சென்னை குத்துவிகேற்றி சிறப்பித்து திருமதி.நிர்மலா முரளிதரன் அனைவரையும் வரவேற்றார்.ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்அருளாசி வழங்கினார்
இந் நிகழ்ச்சியில் ஏழை எளியவருக்கு துணிமணிகள் மற்றும் புடவை வேட்டி வழங்கி அன்னதானமும் அளிக்கப்பட்டது. ஸ்வாமிகள் பேட்டி வருங்கால சந்த்தியினர்கள் இளைஞசர்கள் சமூக ஆர்வலர்கள் பயன்படும் விதயத்தில் அமைந்துள்ள இந்த அரங்கத்தில் வருகிற 07.07.2016, மஹா ப்ரத்தியங்கிரா தேவி யாகமும்08.07.2016 மஹா சண்டியாகமும்,09.07.2016 கருட யாகமும் 10.07.2016 முதல்12.07.2016 வரை சுதர்சன ஜெயந்தியை முன்னிட்டு ஒரு லட்ச சுதர்சன ஜபத்துடன் மஹா சுதர்சன ஹோம்மும் மூலவர் சுதர்சன பெருமாளுக்குமஹா அபிஷேகமும் நடைபெற உள்ளது .இந்த யாகத்தை ஸ்ரீ வைஷ்ணவதிலகம் ஸ்ரீமான் ஜானகிராம ஐயங்கார் மேற்பார்வையில் 20க்கு மேற்பட்டஸ்ரீ வைஷ்ணவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.. 23.06.2016 அன்று ஸ்வாமிகள் புனித யாத்திரை மேற்கண்ட யாகங்களுக்காக ஸ்வாமிகள் ஆந்திரா ,தெலுங்கானா, ராயல்சிம்மா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள புனித ஸ்தலங்களுக்கும்மடங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டு புனித தீர்த்தங்களை சேகரிக்கவும்மடாதிபதிகளை யாகங்களுக்கு அழைக்கவும் உள்ளார். இந்த யாத்திரை நெல்லூர் குண்டூர்,விஜயவாடா,அன்னவரம், விசாகப்பட்டினம்,மும்பைபூனே ,சீரடி, நாசிக், ஜதராபாத்,கடப்பா,ஸ்ரீசைலம் அகோபிலம், திருப்பதிவழியாக 02.07.2016 தன்வந்திரி பீடத்தில் நிறைவு செய்கிறார். புனிதயாத்திரையில் ஆங்காங்கே உலக நலனுக்காக யாகங்களைசெய்ய உள்ளார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
Prathosha poojai Sivan Vazhipadu.Sri Danvantri Temple - 10/05/2025
pournami poojai sidargal vazipadu, Sri Danvantri Temple - 12/05/2025
Pournami Maha Homam - Sri Danvantri Arogya Peedam - 10/06/2025
pournami poojai,Siddargal poojai, 468 siddargal poojai,walajapet - 10/06/2025
Amavasai poojai, Sri Danvantri Alaya vazhipadu walajapet - 25/06/2025