5 Homams for knowledge at Danvantri Peedam

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் கல்விக்கு தொடர்புடைய ஸ்ரீவித்யா கணபதி, ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ வித்தியாசரஸ்வதி, ஸ்ரீ வித்யா லஷ்மி , ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர் போன்ற தெய்வங்களை முன்னிருத்தி யாகங்கள் செய்யப்படும்.இந்த ஹோமத்தில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கல்வி தரம் உயரவும் பெற்றோர் மகிழ்ச்சியடையவும் கல்வியில் சிறந்து கல்வி உலகத்தை உருவாக்கவும், தேர்வு பயம் நீங்கவும், ஆரோக்யம் சிறப்பாக இருக்கவும், பெற்றோர்களும் மாணவ மாணவியர்களும் மற்றும் ஆசிரியர்களும், உடல் ஆரோக்கியத்துடன் வாழ மேற்கண்ட ஹோமங்கள் நடைபெறுகிறது.

ஹோமம் முடிந்தவுடன் அந்தந்த தெய்வங்களுக்கு விஷேச திருமஞ்சனமும் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகளுக்கு ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட எழுது பொருட்கள் பிரசாதமாக வழங்கப்படும். இதில் சுற்றுப்புற கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமகள் தெரிவித்தார்.

Tamil version

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images