468 Siddhargal Yagam and Special Abishegam

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் உலக மக்கள் நலன் கருதியும், கொரோணா வைரஸின் அச்சம் குறையவும், சூரிய கிரகணத்தின் தாக்கம் குறையவும், உடல் மற்றும் மன ரீதியான நோய்கள் அகலவும், சகல சௌபாக்யங்கள் பெற ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வேண்டி வருகிற 24.06.2020 புதன்கிழமை முதல் 01.10.2020 வியாழக்கிழமை வரை ஸ்ரீ தன்வந்திரி கோடி நாம ஜப யாக்ஞம், ஸ்ரீ தன்வந்திரி ஹோமம், மஹா மிருத்யுஞ்சய ஹோமம், ராகு கேது ப்ரீதி ஹோமம், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு இந்த 100 நாள் யாகங்கள் தங்குதடையின்றி சிறப்பாக நடைபெறவும் சித்தர்கள் மற்றும் குரு மஹான்கள் ஆசிர்வாதங்கள் பெறவும் பீடத்தில் சிவலிங்க ரூபமாக பிரதிஷ்டை செய்துள்ள 468 சித்தர்களை வேண்டி 468 சித்தர்கள் யாகமும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளு இன்று 18.06.2020 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.

மேலும் நாளை 19.06.2020 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் குலதெய்வங்கள், கிராம தேவதைகள் மற்றுல் எல்லை தெய்வங்கள் ஆசிர்வாதங்களை பெற பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள நவகன்னிகள், சப்தமாதக்கள், அனுசூயா தேவி மற்றும் அத்ரி பாதத்திற்கு பொங்கல் வைத்து சிறப்பு ஆராதனைகளும், ஹோமமும் நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழ்கண்ட மின்னஞ்சல் மூலமாகவோ தொலைபேசி மூலமாகவே சங்கல்பத்தை தெரிவித்து குடும்பத்தினருடன் அவரவர் இல்லங்களில் இருந்து பிரார்த்தனை செய்யலாம். நேரடியாக பங்கேற்க யாரூக்கும் அனுமதியில்லை. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தொடர்புக்கு :

                                             ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,

                                            அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,

                                            வாலாஜாபேட்டை – 632513.

                                             Ph : 04172 230033 / 9443330203

                                             Email : danvantripeedam@gmail.com

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images