Sani Shanthi Homam

வாழ்வில் முன்னேற்றமடைய பலவிதமான முயற்சிகளை நாம் மேற்கொண்டாலும் பலவிதமான தடைகள் வந்து அநத முயற்சியை தடுக்கிறது. அந்த தடைகளை வரிசைப்படுத்தி பார்க்கும் பொழுது பித்ருதடை, ஜாதகத்தடை, கிரகத்தடை, வாஸ்துதடை, நவகிரகத்தடை, கர்மவினை, ஊழ்வினைதடை, போன்ற பல்வேறு விதமான தடைகள் நம்முன் வந்து நிற்கின்றன. அதில் பெரிதும் பங்கேற்பது நவகிரகங்களில் ஒன்றான சனிகிரகத்தினால் ஏற்படும் தடைகள் பெரிதும் பாதிக்கிறது. பெரும்பாலான ஜாதகருக்கு சனிதிசை, சனிபுக்தி, சனி அந்தரத்தினாலும் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகின்றனர்.

அதனால் காரியத்தடை, திருமணத்தடை, குழந்தை பாக்யதடை, தொழில் அபிவிருத்தி தடை போன்ற பலதடைகளும் ஏற்பட்டு மன உளச்சளுக்கு ஆளாகின்றனர். இத்தகைய தடைகளுக்கு நிவாரணம் தேடும் வகையில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டைதன்வந்திரி பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி 03.06.2017 சனிக்கிழமை சனி ப்ரீத்தியுடன் சனி சாந்தி ஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமம் பித்ரு தோஷ நிவர்த்தி , ஆயுள் அபிவிருத்திக்காகவும் நடைபெறும் இந்த யாகத்தில் கருப்பு நிற வஸ்த்திரம், நீலநிற வஸ்த்திரம், பச்சரிசி, நெல், எள், நெல்பொரி, நல்லெண்ணைய், வெல்லம் வன்னி, சமித்து போன்ற பொருட்கள் சேர்க்கப்படும். ஹோமத்தின் நிறைவாக காலசக்கர பூஜையுடன், பைரவர் பூஜையும் நடைபெறயுள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Tamil version

Upcoming Events
Contact Details
Sri Danvantri Arogya Peedam, Anandhalai Madhura, Kilpudupet, Walajapet 632 513, Ranipet Dist. Tamil Nadu, India, Email: danvantripeedam@gmail.com, Ph: 94433 30203.
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images