மாசி அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் மகா ப்ரத்யங்கிரா தேவி யாகம்

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 18.02.2015 புதன்கிழமை அன்று மாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு மகா ப்ரத்யங்கிரா தேவி யாகம் நடைபெற உள்ளது.

சூரியனும், சந்திரனும் ஒரே பாதையில் பூமிக்கு நேராக வரும் போது அமாவாசை உருவாகிறது. அன்று முன்னோர்களை நினைத்து, பிதுர் தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாகும்.

பொதுவாக அமாவாசை அன்று காலையில், எழுந்து ஆறு, குளங்களில் நீராடி சூரிய உதயத்திற்கு முன்னதாகவே எள், அரிசி, தர்ப்பைப்புல் ஆகியவற்றை கொண்டு தர்ப்பணம் செய்து பிறகு ஆலயங்களுக்கு சென்று வருதல் நல்லது. பித்ருக்கள் மனம் மகிழ்ந்தால்,நம் வாழ்விலும் மகிழ்ச்சி பெருகும். அமாவாசை தினத்தில் தான் நமது பாவங்கள் விலகுவதாக கூறப்படுகிறது.

இந்நாட்களில் ராகு கேதுவுக்கு விசேஷ பூஜை செய்தால் தடைபெற்ற காரியங்களில் வெற்றி கிடைக்கும். ராகு தசை, ராகு புக்தி. சனி தசை, சனி புக்கி போன்ற தசாபுக்தி தோஷங்களும் நவக்கிரஹங்களால் ஏற்படும் தோஷங்களும் அகலும், பித்ரு தோஷம், நாக தோஷம், காலசர்ப தோஷம் போன்ற தோஷங்களுக்கும் நிவாரணத்திற்குரிய தினமாகவும் கருதப்படுகிறது.

இதனை முன்னிட்டு கயிலை ஞானகரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் சிறப்பு ஹோமமாக அமிர்த சஞ்சீவினி ஹோமம் மற்றும் மகா ப்ரத்யங்கிரா தேவி யாகம் விசேஷ திரவியங்களை கொண்டு காலை 10.00 மணியளவில் நடத்த உள்ளார். மேற்கண்ட யாகத்தில் திருமணத் தடை தொழில் தடை வியாபார தடை சத்ரு உபாதைகள், பொரளாதார தடைகள், கடன் பிரச்சனை பித்ரு தோஷம், பில்லி சூன்யம், செய்வினை கோளாறுகள் மாந்திரிக தொல்லைகள் மாங்கல்ய தோஷம் ஆயுள் சம்பந்தமான தோஷங்கள் நீங்கவும் குழந்தை பாக்கியம் பெறவும் இந்த மாபெரும் ஹோமங்கள் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து கூட்டுப்ப்ரார்த்தனையும் அன்னதானமும் நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேணுமாய் கேட்டுக்கொள்கிறோம். இந்த தகவலை கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார்.

Upcoming Events
Online Booking
Online Purchase available for Pujas,
Homam, Special Prasatham,
Deities and etc., Book now
Diyas Images
 
Diyas Images
 
Diyas Images